01/10/2017

செய்தியைப் பரிமாறும் கருவிதான் மொழியாம்; இதுவே கன்னட ஈ.வெ.ரா. வின் பகுத்தறிவு வழியாம்...


மொழி என்பது மனிதனுக்கு முகமையானதில்லையா?

மொழியின்றி மனிதன் வாழமுடியுமா?

மொழி இயற்கையானதல்லாமல் செயற்கையானதா?

இது எவ்வகையான பகுத்தறிவு?

மொழி என்பது செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் கருவி மட்டுமன்று என்பதை ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளவில்லை..

மொழி ஓர் இனத்தின் முகம்;
ஓர் இனத்தின நாகரிகம்;
ஓர் இனத்தின தொன்மை ;
ஓர் இனத்தின உணர்வு;
ஓர் இனத்தின் உயிர்..

அந்த மொழியைப் புறக்கணிப்பதன் வாயிலாக அந்த இனத்தின முகத்தினைச் சிதைத்து, அடையாளத்தைக் குலைத்து,
நாகரிகத்தை அழித்து, தொன்மையை மறைத்து, ஓர் இனத்தின் அனைத்துக் கூறுகளையும் திரித்துப் புரட்டுவதாகாதா?

’தமிழர் தலைவர்’ என்று சொல்லப்பட்ட ஈ.வெ.ரா.வுக்கு இஃது அழகா?

நிற்க, தமிழை எடுத்துக் கொண்டாலும் இன்று உலக ஞானத்திலும் முற்போக்குத் தன்மையிலும் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது?

தமிழனுக்கு முதலாவது நேரான சரித்திரம் இல்லை (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், தொகுதி 2, பக்கம் 987.)

தமிழில் உலகஞானமும், மற்போக்குத் தன்மையும் இல்லை என்று கூறித் தமிழை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தலாமா?

தமிழனுக்கு வரலாறே இல்லையென்று தமிழினத்தை இழிவுபடுத்தலாமா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..
என்ற வள்ளுவனின் குறளும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்ற கணியன் புங்குன்றனின் புறநானூற்றுப் பாடலும் உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மை கொண்டவை அல்லவா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் தமிழனின் உலகஞானம் வெளிப்படுகிறது.

தெளிவான நேரான சரித்திரம் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது தமிழ்மொழியைக் கொச்சைப்படுத்துகிற ஈ.வெ.ரா. தாம் சார்ந்திருந்த தெலுங்கு கன்னட மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?

தன்னைச் சார்ந்திருந்த - தாம் பேசிய - தெலுங்கு மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?

காரணம் அந்த இரண்டு இனமொழி மக்களும் ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்கவில்லை.

திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தையும் ஏற்காததால் அவரவர் தத்தம் மாநில மொழியையும், இனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தற்காத்துக் கொண்டனர்.

ஆனால், தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்கர்களும் கன்னடர்களும், மலையாளிகளும் திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வையும், பிழைப்புக்காக ஏற்றுக்கொண்டு அரசியலில் பயனடைந்தது ”உள்ளங்கை நெல்லிக்கனி” போன்றதாகும்.

தமிழ்மொழியினைக் கொச்சைப்படுத்திய தோடன்றித் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப்படுத்தி முரட்டு நாத்திகத்தைப் பேசித் தமிழர்களின் நல்ல மரபுகளை ஈ.வெ.ரா. அழித் தொழித்தார்.

ஆகையால் தமிழர்களே..

தமிழர்களுக்கு எதிரான ஈ.வெ.ரா.வையும் பொல்லாத் திராவிடத்தையும் புறந்தள்ளுவோம்..

தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்..

தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.