13/05/2018

மரம் நடு பிறகு தெரியும் அதன் பலன்...


அதை வாழும்போதே நமக்கு உணர்த்தி இருக்கிறார்...

விழுதுகள்விட்டு, பரந்து விரிந்திருந்த ஆலமரம்’ - 27 ஆண்டுக்குப் பிறகு தான் வைத்த மரத்தைப் பார்க்கச் சென்ற இளைஞர் பூரிப்புதான் படித்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது தான் நட்ட ஆலமரத்தை 27 வருடங்கள் போய் பார்த்து களித்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது புஞ்சை கடன்பன்குறிச்சி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை என்றாலும், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே கரூர் வந்து செட்டிலாகிவிட்டார். பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வரும் இவர், மரம் வளர்ப்பது, இயற்கையை காப்பது, இயற்கையைச் சிதைக்கத் துடிக்கும் சக்திகளுக்கு எதிராக போராடுவது என்று பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ரோட்டில் ஆதரவற்றவர்களாகக் கிடக்கும் முதியவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதும் இவரது நலமிக்க பணிகளில் ஒன்று. இத்தகைய சாதிக் அலி, தனது பதினோறு வயதில் அதாவது இவர் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது, தனது கையால் பள்ளி வளாகத்தில் ஆலமரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

அதோடு, அங்கு படித்த வரை கோடை காலங்களிலும் தனியொருவனாக அந்த மரக்கன்றுக்குதண்ணீர் ஊற்றி கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்திருக்கிறார். அதன் பின்னே, கரூர் மாவட்டத்துக்கு அவர் இடம் பெயர்ந்துவிட்டதால், அந்த மரக்கன்றை மறந்து போனார். இந்நிலையில், 27 வருடங்கள் கடந்து சாத்தனூர் செல்ல நேர்ந்திருக்கிறது. அப்போது, அவருக்குத் திடீரென தான் படித்த பள்ளியில் நட்ட ஆலமரக்கன்று பற்றி ஞாபகம் வர, ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கே கண்ட காட்சியைக் கண்டு ஆனந்தமாக துள்ளிக் குதித்தார். ஆமாம், அவர் வைத்த ஆலமரக்கன்று இப்போது பெரிதாகி, கிளைகள் பரப்பி, விழுதுகள் விட்டு, பரந்து விரிந்திருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.