29/08/2018

கிரேக்கமும் தமிழகமும்...


சமீபகாலமாக செய்திகளில் கீரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி கேள்வி பட்டிருக்கலாம். பிரச்சனை என்னவென்று சுருக்கமா சொல்கிறேன்..

கீரிஸ்நாடு ஜெர்மன், அமெரிக்கா மற்றும் யூகே நாட்டிடம் இருந்து வளர்ச்சிகாக கடன் வாங்கியுள்ளது. தேதியில் வட்டியும் கட்டவில்லை, அசலும் கட்டவில்லை. வங்கி பணம் இல்லாம திவாலிகிருச்சுன்னு சொல்வாங்களே அதாவது டெபாசிட் கம்மி கடன் மட்டும் அதிகமா கொடுத்து திரும்ப வராமல் போண்டி ஆகுறது, அந்த நிலை தான் கிரீஸுக்கு. காரணம் என்னவா இருக்கும், கேவலமான பொருளாதார கொள்கை தான்.

சரி இங்க ஏன் தமிழகம் வந்தது?

அதிமுக அரசு ஆட்சிக்கு வரும் போது தமிழகதின் கடன் ஒரு லட்சம் கோடி. தற்போதைய அதிமுக சாதனை கடனை ரெண்டு லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அவர்கள் சொல்லும் சாக்கு உள்நாட்டு உற்பத்தில் 20% கடன் வாங்கலாம் என்று. ஆனால் இவர்கள் கொடுக்கும் புள்ளிவிபரம் நம்பக்கூடியதா?

உற்பத்தியை மட்டுமே கணக்கில் காட்டும் அதிமுக அரசு மனிதவள மேம்பாட்டை கோட்டைவிட்டு விட்டதே. மக்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் இவர்கள் சொல்லும் உற்பத்தி கணக்கை எதிர்கட்சிகள் கூட கேள்வி கேட்காமல் இருக்கே ஏன்?

50 வருடங்களுக்கு முன்னால் ஒரு மணி நேரத்தில் 100 மீட்டர் துணி நெய்ய 50 ஆட்கள் உழைப்பு இருக்கும். அது ஒரு உதாரண கணக்கு அதே போல் மற்ற உற்பத்திக்கும் ஆனால் இயந்திரமான உலகில் அனைத்திற்கும் இயந்திரம் தான் பிரதானம், மனிதம் வெறும் கண்காணிப்பாளம் மட்டுமே. அதுக்கு எத்தனை ஆட்கள் உழைப்பு தேவைப்படும்? அப்படியானால் நம் மனிதவளம் எந்த லட்சணத்தில் இருக்கிறது?

வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் தகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேலையில். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சம்பளத்தில் ஆனால் அரசு சொல்லும் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என்று.

அந்த புள்ளிவிபரம் அரசு பணியாளர்களின் சம்பள சதவிதம் கொண்டும், நுகர்வோர் பயன்பாடு கொண்டும் அளக்கப்படுகிறது.

அதாவது ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவனையும் ஆயிரம் சம்பளம் வாங்குபவனையும் ஒரே மாதிரியாக பார்க்கும் அரசு.

நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் என்ற விசத்தை மட்டுமே அரசு நம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

இப்படியே குடிச்சிட்டு போனா எல்லாரும் செத்துபோய் குடிக்க ஆள் இருக்காதே. அப்போ தமிழக அரசு அண்டை மாநிலங்களில் சரக்கு விற்குமோ?

ஒரு அரசு நிதி நெருக்கடியை சமாளிக்கும் லட்சணமா இது?

சாப்பிடுவதற்கு மக்களுக்கு ரொட்டி இல்லை மன்னா என சொன்னதுக்கு ரொட்டி இல்லாட்டி என்ன கேக் சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னானாம் ஒரு முட்டாள் மன்னன். அந்த லட்ணத்தில் இயங்கிறது அரசு.

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சமமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா?

ஒவ்வொரு சாமான்யனும் பெரும் கடனில் தான் இருக்கின்றான். அவனை சமாதானம் செய்ய இலவச தொலைகாட்சி, இலவச மின் விசிறி, இலவச மிக்ஸி கொடுத்து பின்னாடியே மின்சார கட்டணத்தை நாலு மடங்கு உயர்த்தி வயிற்றில் அடிக்கிறது அரசு.

மின்சாரத்தில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் (அல்லது இழப்பு. இப்படி தானே 2ஜி அலைகற்றையில் ஜல்லிடக்கிறானுங்க).

பெரும் முதலாளிகள் தன் சொந்த வருமானத்தில் மட்டுமே வருமான வரியாக அரசுக்கு வரி செலுத்துகிறான் ஆனால் ஒவ்வொரு சாமான்யனும் உன்னை போல என்னை போல ஒவ்வொருவனும் உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, கல்வி கூட நம் காசு தான் வரியாக போகின்றது.

சராசரியாக ஒவ்வொரு பொருளுக்கும் 40%க்கும் அதிகமான அளவு உற்பத்தி விலையை விட வரியாக நாம் கொடுக்குறோம்.

நாம் வரி கட்ட மாட்டோம்னு சொல்லலையே, அப்படி மக்களை காக்க வேண்டிய அரசு தன் நிதி நெருக்கடியை சமாளிக்க மக்களுக்கு விசம் விற்பதை எப்படி அனுமதிப்பது.

அரசு மருத்துவமனையில் மது அடிமைகள் நாய் போல் பார்க்க படுகிறார். திருந்தலாம்னு போறவன் கூட ரெண்டு நாளில் இதுக்கு குடிச்சே சாவலாம்னு ஓடியாறான்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளசாரயம் வருமாம். இப்ப மட்டும் என்ன நொள்ளசாராயம் விக்குதாம்.

சட்டபஞ்சாயத்து அமைப்பு மதுவின் தரத்தை சோதிட வேண்டும் என கேட்டத்தற்கு அரசு மறுத்து விட்டது பின் அவர்கள் கோர்ட் அனுமதியுடன் சோதித்து பார்த்ததில் நிர்ணயிக்கபட்ட அளவை விட ஆல்ஹகால் அதிகமாக இருந்தது. அதற்கு அவர்கள் தடை கோரியும் அதே சரக்கு வித்துகிட்டு தான் இருக்கு.

இங்கே பெரும் பணமுதலைகள் மேலும் பண டைனோசர்கள் ஆகவும் ஏழைகளும், சாமானயர்களும் நசுங்கி நாசமாக போகவும் தான் அரசு இயங்கி கொண்டிருக்கிறது.

டாஸ்மாக்கை ஒரேடியாக மூட முடியாது தான். கடைகளை குறைக்கலாமே. நேரத்தை குறைக்கலாமே.

இப்படியான போதை அடிமைகளை உருவாக்கி என்ன செய்ய கனவு கண்டுகொண்டிருக்கிறது. இதுதான் சிறப்பு பொருளாதாரமா?

நிச்சயம் இந்த பதிவு அதிமுக அடிமைகளுக்கு . ஆப்பு சொருகுன மாதிரி தான் இருக்கும்.

நீங்களெல்லாம் நேர்த்து விட்ட எருமைகள், கண்ணை கட்டிய கழுதைகள். இது உங்களாக எழுதப்பட்டதல்ல.

சமூகம்பால் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமான்யனுக்காகவும் எழுதப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.