29/08/2018

நல்ல எண்ணங்களை ஏற்படுத்த...


உங்களது எதிர்மறை எண்ணங்களை போக்கி உங்களை சுற்றி எப்போதும் நல்ல உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும் ஏற்படுத்த எளிய முறைகள்....

1. உங்களுக்கு என்ன வேண்டுமோ , அதில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்..

2. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மட்டும் செய்யுங்கள்

3. உங்களை சுற்றி இருக்கும் நல்ல அடிப்படை வசதிகள் ( மின்சாரம், காற்று , தண்ணீர், இருக்குமிடம், சுவாசிக்கும் காற்று, முதலிய) எல்லாவற்றையும் மனதார பாராட்டுங்கள், நன்றி கூறுங்கள்...

4. நியூஸ்பேப்பரில் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....நியூஸ் பேப்பரில் , நகை, வீட்டு உபயோக பொருட்கள், கார் , ஸ்கூட்டி, பைக் , வீடு போன்ற பெரிய விளம்பரங்களை மட்டும் பாருங்கள்..

5. டிவியில் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளையும், அழுகை சீரியல்களையும் பார்க்காதீர்கள்.

மற்றவர்களை குறைசொல்லி கொண்டிருக்கும் செய்திகளால் , தவறுகளை பெரிதுபடுத்திகொண்டே இருக்கும் செய்திகளால் , விபத்து செய்திகளால் மனதிற்குள் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும்

6. அறிவு பொக்கிஷங்களையும், நல்ல பாடல்களையும் மட்டுமே கேளுங்கள், பாருங்கள்...

7. நீங்கள் எதற்கெல்லாம் நன்றி உடையவர்களாக இருக்கிறேர்களோ அவற்றையெல்லாம் மனகண்ணில் காட்சியாக உணர்ந்து அதற்கு மனதார அடிக்கடி நன்றி கூறுங்கள்..

உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும்.

8. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்..

9. தினமும் கொஞ்ச நேரமாவது முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து தன்னம்பிக்கையாக பேசுங்கள்... உலகத்தில் சிறந்த நபரிடம் பேசுவதாக உணருங்கள்

10. உங்கள் தன்னம்பிக்கையும், திறமைகளையும் மனதார நம்புங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.