இந்திய ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் ஐ 1995 ஆம் ஆண்டு யூனிலீவர் வாங்கியது .பிறகு இத்தாலியின் கார்னேட்டோ(cornetto) மற்றும் மேக்னம்(Magnum) நிறுவனங்களையும் வாங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது ஐஸ்கிரீமை கடைபரப்பியது.
கடந்த ஆண்டு அமுல் நிறுவனம் தொடந்த ஒரு வழக்கின் மூலம் தான் ஒரு உண்மை வெளியே வந்தது. அதாவது உலகளாவிய உணவு விதிகளின் படி பால், சர்க்கரை சேர்த்து செய்த பனிக்கூழ் தான் ஐஸ்கிரீம். ஆனால் யூனிலீவர் , பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்து ( கிட்டத்தட்ட வனஸ்பதி தயாரிப்பதை போல ) , அதற்கு செயற்கை சுவையூட்டி ஐஸ்கிரீம் தயாரிக்கிறது.
அமுல் தொடர்ந்த வழக்கிற்கு பிறகும் யூனிலீவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்கிறது ஆனால் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை சொல்லாமல்.. ஆம் குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் பேக்கிங்கில் "Icecream" வார்த்தையே இல்லை.KwalityWalls என்ற பெயர் மட்டுமே இருக்கும். அது என்ன பொருள் என்றும் குறிப்பிடப்படவில்லை . ஆனாலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.