பரிகாரம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பலருக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் பலரிடம் ஆயிரக்கணக்கிலே, லெட்சக்கணக்கிலே ஏமாற்றப்படுவதே காரணமாகும்.
யார் யாருக்குப் பரிகாரம் பண்ணுவது, வேறு ஒருவர் உங்களுக்காக பரிகாரம் பண்ணுகிறேன் என்றால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
நாம் அனைவரும் மூன்று விதமான பிரபஞ்ச இயக்கத்திற்கு உட்பட்டவராகிறோம்.
1) கிரியாச் சக்தி
2) இச்சா சக்தி
3) ஞான சக்தி.
இம்மூன்று சக்திகள் தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
கிரியாசக்தி - என்பது ஒருவர் பிறக்கும் பொழுது அவர்களின் முன்னோர்களின் பூர்வ புண்ணிய கர்மாவின் நிலையைச் சார்ந்ததாகும். பொதுவாக இது ஏழு தலைமுறையை சார்ந்ததாகும்.
இச்சாசக்தி என்பது இப்பிறவியில் நாம் செய்யும் நன்மை, தீமையைச் சார்ந்ததாகும்.
ஞானசக்தி என்பது ஆன்மீக அருள் சக்தி ஆகும். இது நாம் பிரபஞ்ச இயக்கத்தின் உயர் சக்தியாகிய கடவுளின் அருள் ஆசியின் மூலம் பெறப்படுவதாகும். இந்த சக்தி தியானம், பூஜை, ஜெபம், தவம் ஆகியவற்றால் பெறுவதாகும்.
இவ்வாறு இருக்க எவ்வாறு உங்களுக்காக பரிகாரம் செய்ய முடியும் ?
பிரபஞ்ச உயர்சக்தியான கடவுளை பணமோ, பொருளோ கொடுத்து ஏமாற்ற முடியாது. கடவுள் ஒரு நியாமான வியாபாரி போன்றவர். கடவுள் அவரவர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தண்டனை அளிப்பவராக இருக்கிறார். தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. சுய ஆதாயத்திற்காகவோ, சுய நலத்திற்காகவோ செய்யப்படும் பாவங்களுக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு. அது ஏழு தலைமுறை வரைக்கும் விடாமல் துரத்துவதாகும்.
நாம் அனைவரையும் நம்மை அறியாத தனிச் சக்தி நமது வினைகளுக்குத் தக்கபடி நவகிரகங்௧ள் மூலம் நமது வாழ்க்கையை இயக்கிக் கொண்டி௫க்கிறது. பூர்வ வினையின் கர்மாவின் அடிப்படையில் நாம் தோன்றுகிறோம்−அதுதான் நமது ஜனன ஜாதகம் அது தான் விதி.
தெரிந்து செய்த பாவங்களுக்காக காசிக்குச் சென்றோ, ஜெருசலேமுக்கு சென்றோ, மெக்காவுக்கு சென்றோ புனிதமாக்கிக் கொள்ளமுடியாது.
பூர்வ புண்ணியத்தில் பெற்ற தீமையான காரியங்களை இந்தப் பிறவியில் நன்மை செய்து தான் கழிக்க முடியும். நாம் செய்யும் நன்மை நமது வாரிசுகளுக்கும் நன்மை தரும் செயலாக அமைகிறது. நமது குணநலம் அதைச் சார்ந்த நன்மை தீமைகள், உடல் நலம் அனைத்தும் நமது மரபு அணுக்களில் பதியப்பட்டு விடுகிறது. தாயிடம் இருந்து ஏழு மரபு அணுக்களும், தந்தையிடம் இருந்து ஏழு மரபு அணுக்களும் பெற்று மனிதன் உருவாகிறான்.
வினை இரு வைகைப்படும் நல்வினை தீவினை பூர்வ வினையில் நல்வினை அதிகம் இ௫ப்பின் இப்பிறவியில் நல்லவைகளே நடக்கும். பூர்வ வினையில் தீயவினை அதிகம் இ௫ப்பின் இப்பிறவியில் தீயவைகளே நடக்கும். அதாவது கிரகங்கள் அவர் அவர் வினைகளுக்குத் தக்கபடி செயல்படுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த கிரகங்களை நமது விருப்பத்திற்கு செயல்படுத்த முடிமா? நிச்சியமாய் முடியாது. அப்படி எனில் என்ன செய்வது?
வினையை வினையால் தான் சரிசெய்ய முடியும்.
பூர்வ வினையில் உள்ள தீவினை இந்த பிறவியில்நன்மை செய்துதான் சரி செய்ய முடியும்.
இத்தகைய மரபு அணுக்களின் தன்மையை நம் செயல்களின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் நன்மையாக மாற்ற முடியும் என்பது உண்மை. ஆகவே நமது வாரிசுகளை வளமாக்க நமது மரபு அணுக்களை வளமாக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம். ஜாதகம் என்பது ஒருவனின் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் ஒரு மனிதன் பிறக்கும் பொழுது நிர்ணயிக்கப்படுவதாகும். ஒரு குழந்தை கரு தரிக்கும் பொழுதே அது எவ்வாறு பிறக்கவேண்டும் என்பது, மற்றும் வாழ வேண்டும் என்பது, இறக்கவேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. இருப்பினும் விதியாகிய சூரியனை மதியாகிய சந்திரனால் வெல்ல முடியும். ஆம் கிரிகையின் சக்தியை இச்சை சக்தி கொண்டும், ஞானசக்தி கொண்டும் மாற்றவேண்டும். இதை நீங்கள் தான் செய்ய முடியும். பொதுவாக நாங்கள் பரிகாரத்தை மூன்று தன்மைகளைக் கொண்டதாக எண்ணுகிறோம்.
1) உடல் சார்ந்த பரிகாரம் - உடல் சார்ந்த பரிகாரம் என்பது உணவு முறையைச் சார்ந்ததாகும்.
2) உள்ளம் சார்ந்த பரிகாரம் - உள்ளம் சார்ந்த பரிகாரம் என்பது தியானம், மந்திரங்கள், தெய்வீக சங்கல்பங்கள் போன்றவையாகும்.
3) உடமை சார்ந்த பரிகாரம் - உடமை சார்ந்த பரிகாரம் என்பது தான தர்மங்களைச் சார்ந்ததாகும். தான தர்மங்கள் மூன்று வகைப்படுத்தலாம்.
1) பொருள்தானம் :- பொருள்தானம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவது.
(உதாரணமாக: சுக்கிர பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு குடம், துணிமணிகளை வாங்கி கொடுத்தலாகும்.
பொருளாதாரத்தில் நீங்கள் சிறப்புடன் இல்லை என்றால்..
2) சிரம தானம் செய்யலாம்.
(உதாரணமாக சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர், கண்பார்வை அற்றோற்கு உடல் உழைப்பை தானமாகச் செய்யலாம்.
பொருளாதாரமும், உடல் ஆரோக்கியம் அற்றவர்களுக்கு..
3) நல் உணர்வு தானம் செய்யலாம்.
உதாரணமாக நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கு நலம் பெற வேண்டும் என்று நல் உணர்வு தானம் செய்யலாம்.
நாங்கள் யாருக்கும் பரிகாரம் செய்வதே கிடையாது. ஒருவருக்கு பசித்தால் அவர் தான் உணவு உண்ணவேண்டும். ஆகவே நாங்கள் உங்கள் ஜாதகம் மற்றும் பிரச்சனைகளை ஆய்ந்து அதற்கு ஏற்ப பரிகார முறைகளைக் கூறுகிறோம். ஆனால்
பரிகாரம் அதை நீங்கள் தான் செய்ய வேண்டியதாக இருக்கும்.
இத்தகைய பரிகாரங்களில் கூறப்படும் மந்திரங்கள் பீஜாச்சரங்களுடன் கூடிய சக்தி வாய்ந்த சிறு மந்திரகளாக இருக்கும், தவறானவர்கள், தவறான தொழில் செய்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள எண்ணாதவர்கள் தயவு செய்து எங்களை அணுகவேண்டாம்.
1) தியானம் செய்வது மனச்சாந்தியும் தெளிவான முடிவெடுக்க உதவும்.
கோடி பூஜைகள் ஒரு தோத்திரத்திற்கு சமம்!
கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு (மோட்சம்) சமம்!!!
தியானத்தினால் பாதை தெரியும். தியானத்திற்கு உயிர் ஓட்டமான மந்திரங்கள் தேவை. அத்தகைய மந்திரங்௧ளில் பீஐமந்திரங்கள் இடம் பெற வேண்டும். அத்தகைய மந்திரங்௧ள் உங்களுக்கு ஜதக ரீதியாலும் அனுபவரீதியாலும் உதவுவதாக அமைய வேண்டும். அத்தகைய மந்திரங்கள் உங்கள் குரு மூலமோ அல்லது எங்௧ளிடமோ பெற்றுக் கொள்ளுங்௧ள்.
இவைகள் அனைத்தும் எந்த ஒரு பிரதி உபகாரம் இன்றி செய்யப்பட வேண்டும். மனச்சாந்தியும் தெளிவான முடிவெடுக்க உதவும்.
3) நேர்மையான நெறி முறையில் வாழ்வது மூலம் நாம் கிரகங்களின் தீமைகளிடமிருந்து விடுபடலாம்.
இம்சையைச் செய்யாதவர்௧ளுக்கும், இந்திரியங்களை அடக்கியவர்௧ளுக்கும், தர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட தனத்தை உடையவர்௧ளுக்கும், தர்ம சாஸ்த்திரங்௧ளை ௧டைப்பிடித்து நடப்பவர்௧ளுக்கும் நவகிரகங்௧ள் நன்மையைச் செய்யும்.
பாலதீபிகை என்ற சோதிட நூலில் மந்தேஸ்வர மகாரிஸி கூறியுள்ளர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.