நமது நிலத்தை அரசாங்கம் தனது திட்டத்திற்காக எடுத்துக்கொள்ள திட்டமிடும் போது அதை முதலில் நம்மிடம் தெரிவித்து நமது அனுமதி பெற்ற பிறகு மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு காவல்துறையை அனுப்பி நிலத்தின் சொந்தகாரர்களை அவர்கள் நிலத்தில் இருந்து துரத்தி விட்டு அளவு எடுக்கிறார்கள். மக்களின் உரிமைகளை துச்சமாக மதிக்கும் அரசாங்கம் தான் இது போன்ற கொடிய வேலைகளை மனசாட்சி இல்லாமல் செய்ய துணியும்.
இத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு தமிழக முதல்வர் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தை தாங்களாகவே மகிழ்ச்சியுடன் கொடுப்பதாக பேட்டி அளிக்கிறார். நிலத்தை பறி கொடுக்கும் விவசாயிகள் பேட்டி கொடுக்கும் போது காவல்துறையை வைத்து எங்களை மிரட்டினால் நாங்கள் வேறு என்ன தான் செய்ய முடியும் என்று கூறுவது மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
நமக்கும் இந்த பிரச்சனைகள் வரும் வரை காத்திருக்க போகிறோமா அல்லது கண் முன்னே இது போன்ற கொடுமைகள் நடக்கும் போது எதிர்ப்பு குரலை எழுப்ப போகிறோமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.