துருக்கியில் கோப்கெலி டெபே எனும் இடத்தில் உலகின் மிக தொன்மையான கோயிலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சாதா கோயில் இல்லை, மிக விஸ்தாரணமாக கட்டபட்டுள்ளது.
லேயர் லேயராக இதை அகழ்ந்தெடுத்த ஆய்வாளர்கள் பல ஆயிரம் வருடங்கள் இது தொடர்ந்து கட்டபட்டிருக்க வேண்டும் என்கின்றனர். இதை கட்ட துவங்கிய வருடம் கிமு 9,600 எனவும் இதில் கடைசியாக கிடைத்த கட்டிடம் கிமு 7000 வருடம் கட்டபட்டது எனவும் கூறுகின்றனர்.
கிமு 9600 ஆண்டளவில் மனிதன் கற்காலத்தில் இருந்தான்.சக்கரம், இரும்பு, செம்பு என எந்த உலோகமும் கண்டுபிடிக்கபடவில்லை. விவசாயம் உருவாகவில்லை. மிருகங்களை மனிதன் வளர்க்க துவங்கவில்லை. அன்று சில லட்சம் மனிதர்களே பூமியில் இருந்தனர்.
இந்த காலகட்டத்தில் கடவுள் வழிபாடும் அதற்கு இத்தனை விஸ்தீரணமான கோயிலும் உருவாக்கபட்டது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.இந்த கோயிலை அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜியை வைத்து உருவாக்குவது இன்று ஒரு போயிங் 747 விமானத்தை காயலான் கடை சாமானங்களை வைத்து நம் வீட்டில் உருவாக்குவதுக்கு சமமாம்.
அந்த காலத்தில் இருந்த மனிதர்களுக்கு இந்த கோயிலை உருவாக்குவதில் வேற்றுகிரகவாசிகள் பங்கெடுத்திருக்க வேண்டும் என கருதும் ஆய்வாளர்கள் கோயிலில் விசித்திரமான மனித சிலைகள், ஸ்டோன் ஹெஞ்ச், ஊர்வன(Reptilian) வேற்று கிரகவாசிகளின் சிலைகள் உள்ளதால் வேற்றுகிரகத்தில் இருந்தது வந்தவர்களின் உதவியால் தான் கட்டியிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.