கிறித்தவம் ஆசிய ஆன்மிக இயக்கம் – சிலுவை ஐரோப்பியக் கொலைக் கருவி...
1. இயேசு கிறித்து ஆசியாவில் பிறந்த ஆசியர். இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஆவர். அந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களால் சிறப்பிக்கப்பட்ட கருவிதான் சிலுவையாகும்.
2. இயேசு கிறித்து ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர் என்பதைப் போலவே இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களே..
3. கிறித்தவத்தை விளக்கும் வேத நூலாகிய பைபிளில் உள்ள அனைத்துப் புத்தகங்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களாலேயே எழுதப்பட்டவை. ஐரோப்பியர்களால் பைபிளிலுள்ள எந்த ஒரு புத்தகமும் எழுதப்படவில்லை.
ஆன்மீகத் தலைவர்...
உங்களை வலக்கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் (மத்தேயு 5:39) என்று கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் கற்றுக் கொடுத்ததைச் சிலுவையில் அவரை அறைந்த பொழுது "தந்தையே இவர்களைப் பொறுத்தருளும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(உலூக்கா 23:24) என்று நடைமுறையில் காட்டிய ஆன்மீகத் தலைவர் இயேசு கிறித்து ஆவார்.
அவர் போதனையில் வன்முறைக்குச் சிறிதும் இடம் இல்லை. அவரைச் சிலுவையில் அடித்தபொழுதும் வன்முறைக்கு மாறாக மன்னிப்பையே பகைவர்களுக்கும் அருளினார்.
ஆகவே சிலுவை ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவி என்பதையும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறித்து பகைவருக்கும் மன்னிப்பை அருளும் ஆன்மீகத் தலைவர் என்பதையும் ஆழமாக எண்ணிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவி?
ஐரோப்பிய அரசனாகிய கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவம் வன்முறையற்ற ஓர் ஆன்மீக இயக்கமாக விளங்கியது.
ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவத்தைக் குறிக்க, கான்சுடன்டைன் காலம் வரை ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவியாகிய சிலுவை அடையாளம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.