23/12/2017

கடந்த 5 மாதத்தில் பாஜகவிற்கு 80 ஆயிரம் கோடி நன்கொடை என்ற பெயரில் வந்துள்ளது. அண்ணா ஹாசாரே பரபரப்பு குற்றச்சாட்டு...


விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், நாட்டில் மக்கள் எண்ணற்ற துண்பங்களை சந்தித்து வருகின்றனர் பிரதமருக்கு 32 கடிதம் எழுதியிருந்தேன் ஒன்றிற்கு கூட பதில் வரவில்லை, வரும் மார்ச் 23 ஆம் தேதி ஊழலுக்கு எதிராக மீண்டும் மாபெரும் எழுச்சி போராட்டத்தை துவங்க உள்ளேன் என அண்ணா ஹசாரா தெரிவித்துள்ளார்.

ஜன்லோக்பால் சட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனமாக்கிவிட்டது என தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக கூறியது. ஆனால் பாஜக அரசு தற்போது காங்கிரசை விட  பலவீனமாக்கியுள்ளது, அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்ற சட்டத்தை பாஜக அரசு நீக்கி விட்டது.

தனியார் நிறுவனம் வருமானத்தில் 7.5 சதவிகிதம் தான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும் என்ற சட்டத்தை பாஜக அரசு மாற்றி எவ்வளவு வேண்டமானாலும் நன்கொடை அளிக்கலாம் என திருத்தியுள்ளது.

மக்கள் மிகவும் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்,கடந்த 3 ஆண்டு ஆட்சியில் ஆசிய நாடுகளின் பட்டியலில் ஊழலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

எனவே ஊழலை எதிர்த்த மீண்டும் எனது போராட்டத்தை துவங்க உள்ளேன் என அண்ணா ஹசாரா கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.