2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வேறு சிலர்....
1. வினோத் கோயங்கா - ஸ்வான்டெக் (2ஜி உரிமத்தைப் பெறுவதற்காகவே ரிலையன்ஸ் உருவாக்கிய நிறுவனம்).
2. கௌதம் தோஷி - ரிலையன்ஸ் குழுமம்.
3. ஹரி நாயர் - ரிலையன்ஸ் குழுமம்.
4. சுரேந்திர பிப்பாரா - ரிலையன்ஸ் குழுமம்.
5. ஷாஹித் உஸ்மான் பல்வா - 2ஜி உரிமத்தைப் பெறுவதற்காகவே ரிலையன்ஸ் உருவாக்கிய நிறுவனம்.
6. சஞ்சய் சந்திரா - யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர்.
7. ஆசிஃப் பல்வா - குசேகுவான் நிறுவனம்.
8. ராஜீவ் அகர்வால் - குசேகுவான் நிறுவனம்.
சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான "நெஞ்சில் துணிவிருந்தால்" படத்தில் ஒரு வசனம் வரும்.
"ஒரு கலெக்டரும் தாசிக்தாரும் கொல்லப்பட்டால், எல்லோரும் கலெக்டர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய இலக்கே தாசில்தாரைக் கொல்வதுதான் என்பது அவர்களுக்குத் தெரியாது."
இந்திய வரலாற்றில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்டனை பெறுவதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல...
அதுவும் ரிலையன்ஸ் நிறுவனம் மீதே குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், ஆதாராங்களை சமர்ப்பிப்பதில் சிபிஐ சுணக்கம் காட்டியதை தீர்ப்பில் நீதிபதியே சுட்டிக்காட்டியிருக்கிறார்...
கூட்டிக்கழிச்சிப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.