25/11/2017

தலைமுறை தாகத்திற்கு தீர்வை தேடும் உழவன்...


கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர்ஏரி கடைசி தலைமுறையா?

சீமை கருவேலம் மரம் நிறைந்து அழிவின் விளிம்பில்.

மாவத்தூர் ஏரி சுமார்  650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவை கடவூரின் மையப்பகுதி தரகம்பட்டி அருகில் உள்ள மாவத்தூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவையாகும்.

கடவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மழைநீர் இங்கு வருகிறது. தற்போது தண்ணீர் பெய்த மழையில் சிறிதளவு தேங்கியுள்ளது.

இவ் ஏரியில் மூன்றுகுமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை ஏரி கரையோரம் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனவசதி செய்வதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.   

தற்போது ஒருகுமிழ்  மட்டுமே பாசனவசதி செய்வதற்கு பயன்படுகிறது.

மற்றொருகுமிழ் கள் மண்ணில் மறைந்து மேடாக முடிக்கிடக்கிறது.

இன்னொரு குமிழ்கள் முழுவதும் மறைந்தது. இவை படத்தில் காணலாம்.

ஏரியை ஒருமுறை கூட தூர்வாரியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சப்பட்டிஏரி சம்பந்தாமாக லஸ்கர் ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முயற்ச்சி செய்துள்ளார். அது தோல்வியில் முடிந்துள்ளது. அவரும் தற்போது இல்லை இறந்து விட்டார் போல.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சிறிது நாள் செய்ததாக தகவல்.


இந்த ஏரியை இப்பகுதிவாழ் விவசாய மக்கள் தூர் வார வேண்டும் என கூறுகின்றனர்.

இவ்வேரியில் நீர் இருக்கும் பட்சத்தில்
சிந்தமாணிப்பட்டி குளம்
காணியாளம்பட்டி குளம்
உடையாப்பட்டி குளம்
பஞ்சப்பட்டி ஏரி
இறுதியாக  அடைகிறது.

முக்கிய நீரோட்டமாக உள்ள ஓரே ஏரி இந்த மாவத்தூர் ஏரி ஆகும்.

இதில் நிரம்பி வரும் தண்ணீர் ஏறக்குறைய 40 கி.மி பயணம் செய்து அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயரால் அன்றே வடிவமைக்கப்பட்டது.

பஞ்சப்பட்டி ஏரியும் நிரம்பும் பட்சத்தில் குளித்தலை தென்கரை வாய்க்கால் காவிரி கரையோரம் கலக்கிறது.

நிதிகளை ஒன்றிணைப்பதை விட
ஏரிகளை ஒன்றிணைத்தாலே. எதிர் வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை குறையும்.

மாவத்தூர் ஏரியை மீட்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.