இவனுக உறவுகளோட திருமணத்திற்கு மோதிரம் செய்ன் போட நகைக்கடை வைத்திருப்பவர்களை மிரட்டுறது...
தர மறுப்பவனை எவனாவது திருட்டுப்பயலை வைத்து இந்தக்கடைல தான் திருட்டு நகையை வித்தேன் எனச்சொல்லி மிரட்டி காசு புடுங்குறது...
போலிசு ஸ்டேசனுக்கு தினசரி பேப்பர் போட வைக்குறது...
ப்ளாஸ்டிக் சேர் A4 பேப்பர் கார்பன் பேப்பர் பைல் மார்க்கர் ஹைலைட்டர் பேனா ஸ்டேப்ளர் என புகார் கொடுக்க வர்றவன்ட்ட பிடுங்குறது..
புகார் யார் மேலேயோ அவனை அழைத்து பொராட்டா கறி மீன்சாப்பாடு சிகரட் வரை உசார் பண்ணிடுறது..
இதில் பிரன்ட்ஸ் ஆப் போலிசுன்னு சில நாதாரிப்பயலுக அரசியல் கட்சில சில்லுண்டி பதவில இருப்பானுக...
இவனுக கிட்டத்தட்ட கருப்பு கவுனு மாட்டாத வக்கீலு போல காம்ப்ரமைஸ் பண்ணுறோம் என்ற பெயரில் மனுதாரர் எதிர்மனுதாரர் ரெண்டு பக்கமும் காசை வாங்கிட்டு கமிசனை கறந்துடுவானுக...
கோர்ட்டு கேசுன்னு போனா நிறைய செலவாய்டும்பா வாய்தா வாய்தாவா இழுத்துடுவானுக என மிரட்டியே இவனுக வாயில் போட்டுக்குவானுக...
வேற வழியில்லை நம்ம கோர்ட்டு லடசனமும் அப்படிதான் இருக்கு...
இரவு நேரக்கடைகளில் எத்தனை பேரை பார்த்திருக்கோம் பைக்ல உக்காந்துகிட்டே அதிகாரமா ஆம்லெட் ஆப்பாயில்னு பார்சல் வாங்குவானுக மறுப்பவனை பொதுமக்களுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு கட்டம் கட்டிடுவானுக...
பைக்ல போலிசு என ஒட்டியிருக்கிற ஸ்டிக்கர் கூட இவனுக காசு கிடையாது...
நல்ல சம்பளம் கௌரவமான பதவி இருந்தும் பிச்சை எடுக்குறவனுக காவல்துறை மட்டும்தான்...
ஒரு பொண்ணு விபச்சார வழக்குல சிக்குனா அவ்வளவுதான் அவள் தொடர்பு எண்ணை இராம்நாடுல இருந்து ஆரம்பிச்சு மாமல்லபுரம் வரை கொடுத்து அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவானுக...
எல்லாருட்டயும் ஓரு கசப்பான அனுபவம் இருக்கு போலிசு நடத்தைகளால் இதை யாரும் மறுக்க முடியாது...
-தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.