எங்கெல்லாம் ஆபத்து இருக்கிறதோ..
அங்கெல்லாம் அதற்கே உண்டான வாழ்வும் இருக்கிறது...
எவை எல்லாம் விஷமாக கருதப்படுகிறதோ...
அவை எல்லாம் மறுபக்கம் அமிர்தமாக கருதப்படுகிறது...
எவை எல்லாம் வளர்கிறதோ...
அவை எல்லாம் அழியவும் செய்கிறது...
அதனால்...
ஆக்கமும் அழிவும் இயற்கையின் உள்ளே அடங்கி இருக்கிறது...
அதேபோல் தான் மனித வாழ்விலும் நிகழும்...
இதில் துன்பம் வந்தால் துவண்டு போவதும்...
இன்பம் வந்தால் துள்ளுவதும் மாயையே அன்றி வேறில்லையே....
இயற்கையை இயல்பை புரிந்து கொண்டால்...
எதனாலும் பாதிப்பு அடைய வேண்டிய இன்னல் இல்லை...
புரிதலும் அறிதலும் தான்...
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.