25/09/2020

இலுமினாட்டி இரகசியம்...

 


Dan Brown எழுதிய Angels & Demons நாவல் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஆனால் அதற்குப் பின்னர் 2003ஆம்  எழுதப்பட்டு 2006ஆம் ஆண்டு திரைப்பட வடிவில் வெளிவந்த The Da Vinci Code உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி நல்ல வசூலையும் வாரிக் கொட்டியதால் அப்போது Angels & Demons நாவலும் Da Vinci Code திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது.

ஐரோப்பிய அணுசக்தி ஆய்வுக் கூடத்திலிருந்து அணுகுண்டை விட அதிகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய Antimatter கடத்தப்படுகிறது.

அதே சமயத்தில் போப்பாண்டவர் இறந்து விட்ட காரணத்தால் புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பும் வாட்டிகனில் நகரில் உயர்நிலை கார்டினல்களால் நடத்தப்படுகிறது.

அப்போது வாட்டிகன் நகரே இறந்து போன முன்னாள் போப் அவர்களது வளர்ப்பு மகனான Camerlengo என்ற பாதிரியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இதனிடையே அடுத்த போப்-ஆக தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்படும் நான்கு கார்டினல்களை 400 வருடமாக இயங்கிவரும் இலுமினாட்டி என்ற ரகசிய இயக்கத்தினர் கடத்தி விடுகின்றனர்.

(இலுமினாட்டி இயக்கத்தினர் கத்தோலிக்க திருச்சபை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள்).

அதோடு அன்றிரவு எட்டு மணி தொடங்கி நான்கு கார்டினல்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என்றும் முடிவாக வாட்டிகன் நகரே Antimatter வீசி அழிக்கப்படும் என்று தகவல் அனுப்புகின்றனர்.

இந்த சிக்கலான பிரச்னையை தீர்ப்பதற்காக வாட்டிகன், குறியீடு சம்பந்தப்பட விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் Robert Langdon அவர்களது உதவியை நாடுகிறது.

10 வருடமாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக வாட்டிகன் ஆவணக் காப்பகத்தை பார்வையிட பலமுறை அனுமதி கோரியும் கூட ஒவ்வொரு முறையும் வாட்டிகன் பாராமுகம் காட்டியதை பொருட்படுத்தாது, (காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவரும் வாட்டிகனுக்கு உதவ முன்வருகிறார்.

இவரோடு Antimatter விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற Vittoria Vetra இணைந்துக் கொள்கிறார்.

இதனிடைய கடத்தப்பட்ட 4 கார்டினல்களில் மூன்று கார்டினல்கள் மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ‘நிலம்’, ‘காற்று’, ‘நெருப்பு” என்ற வரிசைப்படி கொல்லப்படுகின்றனர்.

ஒவ்வொரு கார்டினலும் கொல்லப்படுவதற்கு முன்பே அந்தந்த தேவாலயங்கள் இருக்குமிடத்தை Robert Landon கண்டு பிடித்தாலும், அவர்கள் சென்று சேர்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

இறுதியாக “நீர்” என்ற வரிசையின்படி கொல்லப்படவிருந்த Baggia என்ற கார்டினலை மட்டும் Robert Langdon காப்பாற்றி விடுகிறார்.

இலுமினாட்டி யின் அடுத்தக் குறி Camerlengo-வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் Robert Langdon னும் Vetra வும் அவரைத் தேடி போகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஊரையே ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை நடத்தி அடுத்த போப் ஆக ஆசைப்படுபவன் யார்?

அந்த ஏமாற்று வேலையை Robert Langdon எப்படி கண்டு பிடிக்கிறார்? கயவனின் முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம்.

ஒரு புதிர் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் படத்தை பார்த்தால் நிச்சயம் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வாட்டிகன் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதும், அறிவியல் பெரிதா? மதம் பெரிதா? என்று கேள்வி படத்தில் மறைமுகமாக எழுப்பப்படுவதும் சர்ச்சையை எழுப்பக்கூடிய அம்சங்கள்.

ஆகவே அது பற்றி அழமாக விவரிக்க தேவையில்லை.

Robert Langon ஆக நடித்திருக்கும் Tom Hanks வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார்.

Transformers: Revenge of the Fallen  வெளிவரும் வரை 2009ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் கொண்டிருந்தது.

பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Ron Howard...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.