ஜனநாயக நாட்டில் விவசாயிகள் உரிமையை கேற்கவோ, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களை சந்திக்கவோ கூடாது என்று காவல்துறை விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் 100நாட்கள் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணியாக 01.03.2018 முதல் 08.06.2018 வரை கன்னியாகுமரியில் துவங்கி சென்னை தலைமை செயலகம் வரை பயணம் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக முழுதும் 31 மாவட்ட சென்று விழிப்புணர்வு பேரணி செய்து 31 மாவட்ட ஆட்சியர்களை சந்தித்தனர்.
அதனை தொடர்ந்து இன்று 99வது நாளாக விவசாயிகள் விழிப்புணர்வு பேரணியாக சென்னையில் பயணம் மேற்கொண்டனர்.
அதுசமயம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்/திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைய தலைமை செயலகத்தில் சந்திக்க அனுமதி பெற்று சந்திக்க செல்லும்போது, சென்னை காவல்துறை எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க கூடாது, விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளக்கூடாது என்று தடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநில தலைவர் P. அய்யாக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், சென்னை மாவட்ட தலைவர் ஜோதிமுருகன், காஞ்சிபுரம் மாவட்டம் தலைவர் சண்முகம் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் அனைவரையும் கைது செய்து சென்னை வடபழனி R8 காவல் நிலையத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
ஆகவே, அனைத்து PRESS & MEDIA நண்பர்களும் வடபழனி காவல் நிலையம் வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
PREM - செய்தித்தொடர்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.