08/06/2018

சென்னை (நாய்க்கெப்) பட்டிணம்...


சென்னை' என்கிற தெலுங்கு பெயர் எப்படி தமிழர்களின் தலைநகருக்கு வந்தது தெரியுமா?

ஆங்கிலேயர்களான 'பிரான்சிஸ்டே' மற்றும் 'ஆன்ட்ரு கோகன்' ஆகியோரின் உதவியாளராக இருந்த 'பெரிதிம்மப்ப' என்ற தெலுங்கர் மூலம், தற்போது 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' அமைந்துள்ள இடத்தை 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' என்ற தெலுங்கரிடம் இருந்து விலைக்கு வாங்கி குந்த இடம் அமைத்துக் கொண்டு தமது ஆக்கிரமிப்புக்கு அடிகோலிய 1639 ஆகஸ்ட் 22நாளை 'சென்னை நாள்' என்று
அறிவித்து இன்றும் வெட்கமானமில்லாமல் கொண்டாடி வருகிறோம்..

விஜயநகர பேரரசில் அரவீடு மரபைச் சேர்ந்த (வந்தவாசி , காளகஸ்தி பகுதியை ஆட்சி செய்த) தெலுங்கு பரம்பரையினரான 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' 300 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரனிடம் பணத்துக்கு நிலம் விற்றதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

'அய்யப்ப நாய்க்கெர்' , 'ராயர் நாய்க்கெர்' என்ற சென்னப்ப நாய்க்கெரின் வாரிசுகள் பெயரில் தற்போது ஐயப்பன்தாங்கல், ராயபுரம் போன்ற பகுதிகள் சென்னையில் உள்ளன; அவர்கள் என்ன விடுதலைப் போராளிகளா?

பணத்துக்கு நிலம் விற்றவர் என்றாலும் தெலுங்கர் என்ற ஒரே தகுதி அவர்கள் நினைவை தமிழ்நாட்டில் விதைக்க போதுமானதா?

1957ல் சங்கரலிங்கனார் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ் நாடு' என்று மாற்றக்கோரி 76நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறந்தாரே அவர் பெயரில் ஒரு சாலை கூட இல்லை.

அவர் இறந்த பிறகும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 24-2-1961ல் தமிழில் 'தமிழ் நாடு' என்றும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்'  என்றும் குறிப்பிடப்படும் என்ற அறிவிப்பை சி.சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.

ஆனால் 1969ல் தான் அது நடைமுறைக்கே வருகிறது; அதில் மட்டும் ஏன் இத்தனை மெத்தனம்?

1990களில் 'மெட்ராஸ்' என்ற பெயரை மாற்றி தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது; 1996ல் 'சென்னை' என்ற பெயர்மாற்றம் செய்யப்படுகிறது; இது தமிழ்சொல் அன்று; ஆராய்ந்த போது இதுவும் தெலுங்கு பெயரே.

சென்னையில் வேற்றினத்தார் பெயர்கள்:

1)தமிழக சட்டமன்ற தலைமைச் செயலகம் 2010ல் 400கோடி செலவில் கட்டப்பட்டு அதற்கே ஓமந்தூரார் என்றறியப்படும் ராமசாமி ரெட்டியார் என்ற தெலுங்கர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

2) டி.நகர், தெலுங்கரான சர்.பிட்டி. தியாகராஜ செட்டி என்பவர் பெயரில் உள்ளது; தியாகராயர் மாளிகை கூட உள்ளது.

3) பனகல் பூங்கா (panagal park) , பனகல் ராஜா என்றறியப்படும் தெலுங்கர் 'பனங்கன்டி ராமராய நியங்கார்' என்பவரின் பெயரில் அமைக்கப்பட்டு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது; சைதாப்பேட்டையில் 'பனகல் மாளிகை' கூட உள்ளது.

4) மரு.நாயர் சாலை (Dr.Nayar road) என்பது டி.எம்.நாயர் என்ற மலையாளியின் பெயரில் உள்ளது.

5) தமிழினக் கொலையாளி பெயரில் 'ராஜீவ் காந்தி சாலை'யும், 'ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை'யும் உள்ளது

6) மரு.ம.கோ.இரா சாலை (Dr.M.G.R road) மலையாளியின் பெயரில் உள்ளது.

7) ஜெயலலிதாவுடன் குடித்தனம் நடத்திய கன்னட நடிகன் 'சோபன் பாபு'வுக்கு பொது இடத்தை ஆக்கிரமித்தபடி சிலை உள்ளது.

8) இராதாகிருசணன் சாலை தெலுங்கரான 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' பெயரில் உள்ளது.

9) சர்தார் படேல் சாலை, குசராத்தியரான வல்லபாய் படேல் பெயரில் உள்ளது.

10) காந்தி சாலை குசராத்தியரான 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' பெயரில் உள்ளது; அது போதாதென்று அவர் மனைவி பெயரில் 'கஸ்தூர்பா நகர்' உள்ளது.

11) பெரியார் ஈ.வே.ரா சாலை கன்னட தெலுங்கரான 'ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாய்க்கெர்' பெயரில் உள்ளது.

12) மரு.முத்துலச்சுமி ரெட்டி சாலை (Dr.Muthulakshmi Reddy) என்ற தெலுங்கரின் பெயரில் உள்ளது.

13) பொபிலி ராஜா சாலை, பொப்பிலி ராஜா என்றறியப்படும் தெலுங்கர் பெயரில் உள்ளது.

14) கே.கே.நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) தெலுங்கராக கருணாநிதி பெயரில் உள்ளது.

மேலும் ஜவஹர்லால் நேரு சாலை, நேரு நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், அசோக் நகர், சைதா பேட்டை, சௌகார் பேட்டை, ஜாபர்கான் பேட்டை, ராயப்பேட்டை, ஷெனாய் நகர், மேத்தா நகர், முனுசாமி நாயுடு நகர்…… என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களில் சிலர் தமிழக அரசியலில் அல்லது சமூகப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம்; ஆனால், இவர்களை விட பெரிய அளவில் போராடிய தமிழர்கள் மறைக்கப்பட்டுள்ளனர்.

காமராசர், முத்துராமலிங்கனார், வள்ளலார், திரு.வி.க போன்ற மறைக்க முடியாத தலைவர்கள் பெயரில் மட்டுமே சில பகுதிகள் உள்ளன; வேறுசில தமிழ்ப் பார்ப்பார்ப்பனர் பெயர்களும் ஆங்கிலேயர் பெயர்களும் இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்காக பாடுபட்டவர்கள் அல்லர்..

சுருக்கமாகக் கூறினால் தமிழ்த் தலைவர்கள் யாருக்குமே தமிழகத்தைத் தாண்டி சாலையோ, சிலையோ, மாளிகையோ, நினைவிடமோ இல்லாத நிலையில், தமிழகத் தலைநகரில் பெரும்பாலும் பிற இனத்தவர் பெயரே வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ்ப் பெயர்களிலும் அடையாளமே தெரியாத தமிழர்கள் பெயரே இருப்பது ஏன்?

நன்கு அலசி ஆராய்ந்ததில் டெல்லியில் 'சுப்ரமண்ய பாரதி' சாலை இருப்பதாகத் தெரிகிறது. அவர் தமிழ்ப் பார்ப்பனர் இல்லையென்றால் அதுவும் இருந்திருக்குமா?

தேர்தல் என்று வந்து 100வருடங்களில் தமிழகத்தை வெறும் 15வருடங்கள் தமிழர்கள் ஆண்டனர்; 85வருடங்கள் தமிழரல்லாதவரே ஆண்டு வருகின்றனர்;

800 வருடமாக கண்டவனையும் ஆள விட்டு விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.