31/01/2018

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள்...


எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.

இலங்கை: கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டு பிடிக்கப்பட்டன.

தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா: கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் வாயில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று ‘சேரன்’ என்ற சொல்லுடன் காணப்பட்டது.

தமிழ்நாடு: ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு.

கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ துரத்திலுள்ள பொருந்தலில் கண்டு பிடிக்கப்பட்டன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் “மு-ன-க-ர” எனவும் “மு-ஹ-க-டி” எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.

ஐந்தாம் ‘வீரர்’ கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக் கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.