கிடா வெட்டக்கூடாது என்று 2003ஆம் ஆண்டு அன்றயை ஜெயா அரசால் அரசாணை வெளியிடப்பட்ட போது, இது எங்க தெய்வத்திற்கும் எங்களுக்குமான உறவு, பண்பாடு, கலாச்சாரம் என்று எம்பிகுதித்து அரசையே ஆட்டம் காண செய்த சமூகம், மாடுகளை, ஒட்டகங்களை வெட்டுவதற்கு மறைமுக தடைகள் தற்போதைய அரசு உருவாக்குவதை கண்டும் காணாதது போல் இருக்கிறது.
பாதிப்பு முஸ்லீமுக்கும் பிறருக்கும் தானே, நமக்கென்ன என்று நினைக்கலாம். ஒரு விசயத்தை மறந்து விடக்கூடாது.
அன்றைய எந்த கூட்டம் உங்களை கிடா வெட்டக்கூடாதுன்னு அரசை நிர்பந்தித்ததோ, அதே கூட்டம் தான் இன்றைக்கு மாட்டுக்கறிக்கு எதிராக அரசாணை பிறப்பித்திருக்கிறது.
இதே கூட்டம் நாளைக்கு உங்க சங்கையும் அறுக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.