ஒடிசாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கான அரிசி மற்றும் பணத்தை அம்மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் கேந்திரபாரா மாவட்டத்தின் டுகுகா கிராமத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி சங்கீதா சேத்தி மதிய உணவிற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் பணத்தை தனது தந்தை வழங்க மறுப்பதாக கூறி அவற்றை மீட்டுத் தர வேண்டும் எனக்கோரி 10 கி.மீ நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மாவிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார்.
சிறுமியின் துணிச்சலான இச்செயலை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.