ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் சவுதி அரேபிய நிறுவனம் சுமார் 9555கோடி மதிப்பில் 2.4% பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் பங்கு பதிப்பு 3.37% அதிகரித்ததோடு, அந்த நிறுவனம் கடந்த ஒராண்டுக்குள் சுமார் 4.587லட்சம் கோடி அளவுக்கு தனது நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்திருக்கிறது.
அத்தோடு ரிலையன்ஸ் ரிறுவனம் தொடர்ந்து சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அனைத்து நிறுவனங்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பியூச்சர் குரூப் என்ற சில்லறை வணிகத்தில் ( ஆன்லைன்) ஈடுபட்டுக்கொண்டிருந்த நிறுவனத்தின் அனைத்து கட்டுமானத்தையும் சுமார் 24,713கோடிக்கு வாங்கிவிட்டது. அந்த வரிசையில் நேற்று ’அர்பன் லேடர்’ என்ற ஆன்லைனில் பர்னிச்சர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது.
ஒருபக்கம் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு அந்நிய நிறுவனங்களை உள்நுழைத்து அதன் மூலம் பெரும் பணத்தை திரட்டி, அந்த பணத்தைக் கொண்டு இந்தியாவிலுள்ள சில்லறை வணிகத்தில் ஈடுபடுகிற அனைத்து நிறுவனங்களையும் ரிலையன்ஸ் வாங்கி இந்தியாவில் இனி யார் எதை வாங்கினாலும் ரிலையன்ஸிடம் தான் வாங்க வேண்டுமென்ற ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கி வருகிறது.
இதற்கேற்றார் போல இந்தியாவை ஆளும் மோடி அரசும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, விவசாய பொருட்களை பெரிய முதலாளிகளிடம் மட்டுமே விற்க வைக்கும் வேளான் மசோதா என முதலாளிகளுக்கு இன்னும் சொல்லப்போனால் மார்வாடி சேட் பனியாக்களுக்கு சாதகமான சட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி இந்தியாவில் இருக்கும் பணத்தை மொத்தமும் பனியாக்களுக்கு போகிற வேலையை செய்கிறது.
இதை மறைப்பதற்கு பிஜேபி ஆர்.எஸ்.எஸ் போலியான ’இந்து’ மதவெறியை உருவாக்குகிறது. ஏதேனும் சாதாரண விழா வந்தால் கூட இந்துக்கள் கடையில் வாங்குங்கள் என்று இஸ்லாமியர்களை, கிருத்துவர்களை குறிவைத்து தாக்கும் இந்த இந்து வெறிக் கும்பல்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் அமேசான், பேஸ்புக், சவுதி அரேபிய நிறுவனம் என விற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது ஏன்?
ஆக ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியை போல இந்தியாவை மறுபடியும் வியாபாரத்தின் மூலம் அடிமையாக்கும் வேலையை செய்யும் ரிலையனஸ் போன்ற பாராசூர கம்பெனிகளையும், அதற்கு சேவகம் செய்யும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கூலிகளான மோடி கும்பல்களையும் தூக்கியெறியும் இன்னொரு சுதந்திரபோருக்கு மக்கள் தயாராக வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு அடிமை வாழ்விற்கு நம்மை இந்த கும்பல்கள் இட்டுச் சென்றுவிடும்...
குறிப்பு...
1.https://theprint.in/economy/saudi-arabias-pif-invests-rs-95-55-billion-in-reliance-retail/537867/
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.