அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும், தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட, அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான்.
உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது.
தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான்.
கூடவே அது எப்படி உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான்.
மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது.
அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறான்.
சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான்.
அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.
மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல, முகமும் கூட பிறரைப் போல ஆகி விடுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.