30/01/2018

வளிமண்டலத்தை (ozone) பற்றி 2000 வருடங்களுக்கு முன்பே உணர்ந்த தமிழ் முன்னோர்கள்...


Ozone என்பது இன்றைய அறிவியலின் கூற்றின்படி சூரிய கதிர்களின் நேரடி தாக்குதலை மட்டுப்படுத்தி பூமியில் வாழும் உயிரனங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் ஒரு மண்டலம் ஆகும்.

பூமியில் இருந்து ஆறு பகுதிகாளாக பிரிகிறது ஆகாயம் நோக்கிய நீளம் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

பூமியில் இருந்து ஒன்றின் மேல் ஒன்றாக தொட்ரகிறது இந்த ஆறு பகுதிகளும்.

அவை ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ரோஸ்பியர், மீசசோஸ்பியர், தெர்மொஸ்பியர்,  எக்ஸ்சோஸ்பியர், நத்திங்கனஸ் என்பதாகும். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வளிமண்டலத்தைப் பற்றியும், ஆகாயத்திற்கும்  பூமிக்குமான இடையில் உள்ள பகுதிகளையும் தெளிவாக விளக்குகிறது நமது முன்னோர்கள் படைத்த இலக்கியங்கள்.

“இருமுந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலை இயஆகாயமும்.” (புறநா – 20).

இந்த பாடலில் பூமிக்கு மேல் மூன்று பகுதிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிதுநிலை காயமும்.” (புறநா -30).

இந்த பாடலில் பூமிக்கு மேல் ஐந்து பகுதிகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

“மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்.” (புறநா -365).

இப்பாடலில் உள்ள  “நீத்தம்” என்பது எதுவும் இல்லாதது என்று குறிப்பிடுகிறது. ஆக “நீத்தம்” என்பது இன்றைய அறிவியல் கூறும் நத்திங்கனஸ் என்பதே ஆகும்.  பூமிக்கு மேல் உள்ள இரண்டாவது பகுதியில் தான் சூரியக்கதிரில் இருந்து பூமியை காக்கும் வளிமண்டலம் அமைந்துள்ளது.

இந்த ozone சூரிய கதிரின் வெப்பத்தை தாங்கி அதனை மட்டுப்படுத்தி அதன் நேரடி தாக்கத்தில் இருந்து நம்மை காக்கிறது.

இந்த செய்தி நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். தமிழனின் அறிவியில் வின்னியல் புவியியல் அறிவு நம்மை மட்டுமல்ல உலகத்தவர்களையும், இன்றைய நவீன அறிவியலாளர்களையும் சற்றே மூர்ச்சை அடையத்தான் செய்யும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.