2019 குடிமைப் பணி தேர்வில், அகில இந்திய அளவில். 286 ஆவது இடத்தில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி. மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த. எம். பூர்ண சுந்தரிக்கு. ஐஏஎஸ் பணி ஒதுக்காமல் ( இந்திய வருவாய்த்துறை ) ஐஆர்எஸ் பணி ஒதுக்கப்பட்டதை எதிர்த்து. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளார்.
2019இல் அகில இந்திய அளவில் 713 பேர்கள் குடிமைப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நான் 286 ஆவது இடத்தில் தேர்வு செய்யப்பட்டேன். 1 முதல் 304 பேர்களுக்கு. ஓபிசி பிரிவிற்கான. ஐஏஎஸ் பணி ஒதுக்கப்பட்டது. 286 ஆவது இடத்தில் உள்ள எனக்கு ஐஏஎஸ் பணி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு பணிக்கும் 1 சதவீதமும். மொத்த பணி இடங்களுக்கு 4 சதவீதமும் ஒதுக்கப்பட வேண்டும். என்ற அரசின் உத்தரவை மீறி நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். மேலும் 25.9.2020 வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்து. எனக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டின் படியும், மாற்று திறனாளிகளுக்கான உரிமைச் சட்டப்படியும், ஐஏஎஸ் இடம் ஒதுக்க வேண்டும் என்றும். அதுவரை 1 ஐஏஎஸ் பணியிடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும். மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்னை கிளையில் மனு செய்துள்ளார். மத்திய தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர்கள் எஸ்என். மிரட்டல், நிர்வாக உறுப்பினர் சி.பி.சங்கர் ஆகியோர் விசாரணை செய்தனர். இதற்கு உரிய பதிலை மத்திய அரசு, மற்றும் யூபிஎஸ்சி செயலர், ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எம். பூர்ண சுந்தரிக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்பதும். இதுபோன்று தமிழர்கள் மத்திய. மாநில. அரசு வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவது. முடிவுக்கு கொண்டுவர வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.