உணர்தல் என்பது நீங்கள் உங்கள் தன்மையில் இருப்பதை குறிப்பது ஆகும்.
மனிதனை தவிர.. இந்த இயற்கை முழுவதும் யாருக்கும் எந்த வழிபாடுகளுக்கும் அடிமையாக இருப்பது கிடையாது, இருக்க போவதும் இல்லை..
இயற்கை யாரையும் அடிமை படுத்துவதும் கிடையாது, அடிமை படுத்த போவதும் இல்லை..
அவை ஓவ்வொன்றும் அந்த அந்த நாளில் அதன் தன்மையை சரியாக நோக்கி செல்கிறது..
ஆனால் ஓவ்வொரு வழிபாடுகளையும் சற்று கவனியுங்கள் அது எப்படியோ உங்களை உங்கள் இயற்கை தன்மையை அடிமை படுத்தி விடுகிறது..
காரணம்: இந்த சமுதாயம் குழந்தை முதல் உங்களுக்கு போதித்த உணர்வு அவ்வாறு..
ஒரு நிமிடம் சற்று உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் உங்களுக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும்..
தனிமனித உணர்வை எப்படியெல்லாம் இந்த சமுதாயம் கட்டமைக்க பட்டுள்ளது என்று தெரியும்..
இயற்கை எதுவுமே கட்டமைக்க படவில்லை அது அதன் இயல்பில் இருக்கிறது இயற்கை முழுவதும்...
இனங்கள்,வழிபாடு,மதங்கள்,ஜாதிகள், சமுதாயம் சொந்தம் பந்தம் இவையெல்லாம் உங்களின் பெயர் மட்டுமே ஆனால் உங்களின் உணர்வு இயற்கை தன்மை அல்ல அதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்...
உணருங்கள் உங்கள் இருப்பின் மூலம்...
உணர்வுகள் தொடரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.