நமக்கு ஒரு விடயத்தையோ அல்லது நபரையோ பிடிப்பதற்கும் வெறுப்பதற்கும் எந்த காரணமும் நமக்கு தேவைப்பட வேண்டியதில்லை.
முதன்முதலில் சந்திக்கும் நபரை பார்த்தவுடன் நம் ஆழ்மனம், இதுவரை சேர்த்து வைத்துள்ள மொத்த அறிவையும் பயன்படுத்தி, அவரை பற்றி நிறைய நுணுக்கங்களை அறிந்து கொள்கிறது.
அது அவரவரின் ஆழ்மனங்கள் பழக்கப்பட்ட விதத்தை பொருத்து மாறுபடும். எனவே அந்த முடிவு சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறியும் போகலாம்.
மேலும் நாம் இப்பிறப்பில் சந்திக்கும் முக்கால்வாசி பேர்கள், நமது பூர்வ ஜென்ம உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எதிரிகளே.
ஆம் நாம் குழுக்களாகவே தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே முற்பிறப்பின் வாசனைகள் நம்மை தொடர்ந்தாலும் நாம் அனைவரையும் நேசிக்க பழகுவோம். அதுவே போக போக பழகிவிடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.