நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.
பிற மொழி வார்த்தைகளை தமிழில் எழுதும் பொழுது நாம் 'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ' என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.
சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது.
நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை.
நாம் கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
சமஸ்கிருதம் என்று எழுதாமல் சமசுகிருதம் என்றே எழுதலாம்..
மஹாத்மா என்று எழுதாமல்
மகாத்மா என்றே எழுதலாம்..
ஜப்பான் என்று எழுதாமல்
சப்பான் என்றே எழுதலாம்..
ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல்
திருவரங்கம் என்றே எழுதலாம்..
பக்ஷி என்று எழுதாமல்
பட்சி என்றே எழுதலாம்..
ஹரி என்று எழுதாமல்
அரி என்றே எழுதலாம்..
ஆயிஷா என்று எழுதாமல்
ஆயிசா என்றே எழுதலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.