02/09/2017

நீட் என்ற ஆயுதத்தால் மாணவி அனிதாவை கொலை செய்த மத்திய மாநில அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்...


இதை பற்றி கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் ஆயிஷா சித்திக்கா கூறுகையில்...

+2 தேர்வில் 1176 மதிப்பெண்களும், 196.5 கட் ஆஃப்  எடுத்து மத்திய அரசின் நீட் தேர்வால் தன் மருத்துவ கனவை இழந்த மாணவி தான் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியம் நீட் தேர்வால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். மத்திய அரசின் நம்பிக்கை துரோகத்தால் நீட் அடிப்படையிலே கலந்தாய்வு நடந்தது.

இதனால் மணம் உடைந்து போன அனிதா, தன்னுடைய மருத்துவ கனவு இவ்வருடம் தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவிற்க்கு கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக ஆழ்ந்த இறங்களை தெரிவித்துகொள்கிறேன்...

இது தற்கொலை இல்லை மாறாக மத்திய மாநில அரசு செய்த படுகொலை. அனிதாவின் படுகொலைக்கு மத்திய மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். அனிதாவின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் இந்த அநீதியை எதிர்த்து போராட வேண்டும். தற்கொலை தீர்வில்லை. நாம் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதே அனிதா போன்ற மாணவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு. நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை போராடுவோம்.

A. ஆயிஷா சித்திகா
மாநில துணைத்தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா
தமிழ்நாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.