தொழில்துறை:
1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு "த". (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது "த" உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)
2. மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.
3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்..
சென்னை-வாகனம், கணினி
கடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்
திருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்
கோவை- தொழில், எந்திரங்கள்,
ஈரோடு-மளிகைப்பொருட்கள்
திருப்பூர்-ஆடைகள் ,
கரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.
சேலம்-இரும்பு, அலுமினியம்
மதுரை-விவசாய, பண்ணைக்கருவிகள், எந்திரங்கள்,
நெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி
சிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்பட வேண்டும்)
ஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..
1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..
2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்க வேண்டும்..
3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்..
4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.