கீழடி ஆய்வினை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே நடுவண் (மத்திய ) அரசு திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அஸ்ஸாமிற்கு பணி மாற்றம் செய்தது.
அதுவே ஒருசர்ச்சையாய் மாறிப் பல ஆராய்ச்சியாளர்களும் துறை சார்ந்த சான்றோரும் வேண்டிய பிறகும் மத்திய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
தொல்லியல் ஆய்வு துறை விதிகளின்படி எந்த ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாரோ அவரே அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே. இப்படி இருக்க திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பொருட்களை வேறு ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் அந்த ஆராய்ச்சியின் அறிக்கையைத் திரு.அமர்நாத்திடம் இருந்து பிடுங்கி மற்றொரு அதிகாரியிடம் நடுவண் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்து, ஆதிச்சநல்லூர், கீழடி வரை விடாது கரும் புள்ளியாய் நம்மை இன்றுவரை விரட்டுவதே தொடர் கதை ஆகிப் போனது.
இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய நமது ஆட்சியாளர்களோ நடுவண் அரசாங்கத்தின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
பல்லாயிரம் வருடப் பெருமை கொண்ட தமிழ் இனத்திற்கு இந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட திட்டமிடபட்ட அழிவிற்கு 2019 ஆம் ஆண்டிலாவது ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என நம்புவோம்.
இதனை நடுவண் அரசாங்கம் திரும்ப பெறாவிட்டால் உயர்நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை..
- கார்த்திகேய சிவசேனாபதி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.