03/09/2018

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய நீதிபதி நியமனமும் குழப்பங்களும்...


ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.

இதன்படி நீதிபதி எஸ்.ஜே.வசிப்தார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.ஆனால் திடீரென்று அந்த குழுவின் தலைவரான எஸ்.ஜே.வசிப்தார் தன் சொந்த காரணங்களுக்காக இந்த குழுவில் என்னால் அங்கம் வகிக்க முடியாது என்று தனது பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் புதிதாக ஒரு  ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோரை நியமிக்க பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த வேதாந்தா நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு நீதிபதியையும் நியமிக்கக் கூடாது என்று வாதாடியது. இதனடிப்படையில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த தருண் அகர்வால் என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்திருக்கிறது.https://www.google.co.in/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/ngt-appoints-ex-judge-justice-tarun-agrawal-as-chairman-of-panel-to-decide-vedanta-s-plea-118083100486_1.html

நமக்கெல்லாம் நன்றாக தெரியும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் குஜராத்தை சேர்ந்த அனில் அகர்வால் என்று இப்போது அதே குஜராத்தை சேர்ந்த தருண் அகர்வால் என்ற ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை மிக முக்கியமான வழக்கில்  தலைமைப் பொறுப்பில்  நியமித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

இது ஏதோ 'அகர்வால்' என்ற பெயரை வைத்து நாம் சந்தேகத்தைக் கிளம்புகிறோம் என்று குறுகிய எண்ணத்தோடு யாரும் பார்க்க வேண்டாம். உண்மையிலேயே தற்போது ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தருண் அகர்வால் ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் 2008இல் காசியாபாத்தில் பிராவிடண்ட் பண்ட் நிறுவனத்தை நடத்தி மக்கள் பணத்தை முறைகேடு செய்த முக்கிய குற்றவாளியை விடுவித்தார்கள் என்ற ஊழல் குற்றச்சாட்டிற்காக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது மிக முக்கியம்.

https://m.hindustantimes.com/delhi-news/pf-scam-tainted-judges-forgiven/story-qa0m3CJznjV0SMsCEkTrGI.html

அப்படிப்பட்டவர் இந்த ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது நமது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.