17/10/2017

சந்திர வழிபாட்டின் நுட்பம்...


வழிபடுதல் என்றால் எதாவது ஒன்றைப் பின்பற்றுதல் என்று பொருள்..

அது ஒரு கொள்கையாகவோ அல்லது ஒழுக்க நெறியாகவோ கூட இருக்கலாம்..

நமது பூமியில் இருந்து பார்த்தால் நம் கண்களுக்குத் தெரியும் சூரியனையும் சந்திரனையும் கூட நாம் பின்பற்றலாம் ( வழிபடலாம் ).

அவ்வாறு சந்திரனைப் பின்பற்றும் பழங்குடிகள் இன்னும் இம்மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள்..

இம்மக்களின் நாள்காட்டியும் சந்திரனை மையப்படுத்தியே இருக்கும்..

திங்கள் என்ற சொல் சந்திரனையும் குறிக்கும், மாதத்தையும் குறிக்கும்..

சந்திரன் பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவை பண்டைய தமிழர்கள் ஒரு மாதமாகக் கருதினர்..

அதனால் தான் மாதத்துக்கு திங்கள் என்ற பெயரும் உள்ளது..

மூன்றாம் பிறை தோன்றியதைக் கண்டபின் மாதப் பிறப்பை சந்திர வழிபாட்டினர் உறுதிசெய்வர்..

பிறை, பிறப்பு என்ற சொற்கள் ஒரே பொருள் கொண்டவை..

மூன்று நாட்கள் வானில் சந்திரன் தெரியாது..

அதாவது சந்திரன் இறந்து விட்டதாக அக்கால மக்கள் கருதினர்..

மூன்று நாட்கள் கழித்து சந்திரன் மேற்கு வானில் பிறக்கிறான்..

அதனால் அதன் பெயரை மூன்றாம் பிறை என்று வைத்தனர் பண்டைய தமிழர்..

தூய தமிழ்ப் பெயர்களில்  அழைக்கப்படுவதை வைத்து பண்டைய தமிழர்கள் சந்திர வழிபாட்டினர் என்று நாம் உறுதியாகக் கூறலாம்..

சந்திர வழிபாட்டாளர்களுக்கு மேற்கு திசை மிக முக்கியமானது..

காரணம் மாதப் பிறப்பையும் ஆண்டுப் பிறப்பையும் தீர்மானிக்கும் பிறை தோன்றுவது மேற்கு திசையேயாகும்..

சந்திரனைப் பின்பற்றும் பழங்குடிகளைச் சேர்ந்த ஆண்கள் தங்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்..

எ.கா. அரபு இன மக்கள், ஆப்ரிக்கப் பழங்குடியான மசாய் இன மக்கள் போன்றோர்..

சந்திர வழிபாட்டில் மிக முக்கியமான சடங்காகக் கருதப்படுவது  சுன்னத் நிகழ்வாகும்..

சந்திர வழிபாட்டாளர்கள் சிறந்த போர் வீரர்கள் ஆவர்..

மேலே சொல்லப்பட்ட இன மக்களான அரேபியரும், மசாய் இனத்தவரும் போர்க்கலைகளில் சிறந்தவர்களாவர்..

சந்திர வழிபாட்டுக்கும், கொற்றவை வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..

போரில் வெற்றியடைய கொற்றவையை வணங்குவது நம் வழக்கம்..

அக்கொற்றவைக்கு உயிர்பலி கொடுத்த பின்னர் போருக்குச் செல்வது நம் வழக்கம்..

சந்திர வழிபாட்டினர் ஒரு படி மேலே போய் தங்கள் ஆண் குறியின் முன்தோலை சிறுவயதிலேயே நீக்கிக் கொள்கின்றனர்..

பிற்காலத்தில் வந்த  மதவாதிகள் பிறை தோன்றும் மேற்கு திசையை பார்த்து விடாதவாறு  ஒரு பெரிய நந்தியை குறுக்கே நிறுவினர்..

கடந்த நூற்றாண்டில் பொது மக்களுக்கு சிவன் கோவில்களைத் திறந்துவிட பார்ப்பனர்கள் முடிவு செய்ததும், இந்த நுட்பம் பொது மக்களுக்குத் தெரிந்து விடாத வண்ணம் சிவலிங்கத்தை யாரும் நேருக்கு நேர் பார்த்து விடாதவாறு ஒரு காரியத்தைச் செய்தனர்..

அதாவது கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் மக்கள் லிங்கத்தை பக்கவாட்டில் இருந்து மட்டுமே பார்க்கும்படி இரும்புக் கம்பிகளாலான தடுப்புகளை செயற்கையாக அமைத்தார்கள்.

வைணவப் பெருமாள் கோவில்களில் இத்தடுப்புகள் இருக்காது..

திருவரங்கத்திலும், திருமலையிலும் பெருமாளை நேருக்கு நேர் பார்க்க முடியும்.

ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் லிங்கத்தை நேருக்கு நேர் பார்க்கவே முடியாது.. அதாவது மேற்கு திசையை நோக்கி நாம் வணங்கி விடாதவாறு செய்துள்ளனர்..

பொது மக்களுக்கு சந்திர வழிபாட்டின் நுட்பம் தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவே சிவலிங்கத்தைப் பற்றி நம்பவே முடியாத புராணக் கதைகளை பார்ப்பனன் எழுதியுள்ளான்.

தமிழ் இனத்தின் எதிரியை வீழ்த்தும் நுட்பம் சந்திர வழிபாட்டில் தான்  உள்ளது.

வாழ்க தமிழ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.