குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டுமானால், அது அந்த தாயின் கையில்தான் இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே எங்களுடைய குழந்தைகளுக்கு எந்த விசயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தால், அதை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
சில குழுந்தைகளுக்கு படித்ததையெல்லாம் மறந்து தேர்வில் தோல்வி நிலையை அடையும் போது, அது அவர்களுக்கு ஒரு மனதில் துன்பத்தை தந்து வேதனையைத் தருகிறது.
அப்படி இருக்கும் குழந்தைகளது ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில வழிமுறைகள்.. ஞாபக சக்தியை அதிகரிக்க...
1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.
2. நினைவாற்றல் பெருக்கும் கலை (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.
4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.
5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.
6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை குறுகியகால நினைவகத்திலிருந்து (Short term in memory) இருந்து, நீண்டகால நினைவகத்திற்கு (Long term in memory) பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் .
ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.