09/06/2018

நீங்கள் வாழ்வில் என்னவாக ஆசை படுகிறேர்களோ , அல்லது உங்களுக்கு என்ன வேண்டுமோ, தினமும் அதை ஏழு நிமிடங்கள் கண்களை மூடி கொண்டு கற்பனையால் அதை உணருங்கள்..


அதை ஏற்கனவே அடைந்து விட்டதாக ஆழமாக உணருங்கள்...

நீங்கள் நினைத்தது நடக்கும்... நீங்கள் கேட்டது கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்க்கும் கனவு வீடோ, பிடித்த காரோ, வாழ்க்கை துணையோ, உங்கள் கனவு நிறுவனமோ எதுவாகவும் இருக்கலாம், நீங்கள் பெற விரும்பும் சம்பளம், உயர் பதவி,. நீங்கள் அடைய விரும்புவதை எதுவாக இருந்தாலும், அதை ஏழு நிமிடங்கள் கண்களை மூடி கொண்டு கற்பனையால் தெளிவாக உணருங்கள்.

நீங்கள் கனவு வீட்டை உணர்ந்தால் கற்பனையால் அந்த வீட்டின் சுவற்றை தொட்டு பார்த்து சந்தோஷமடைவதாக உணருங்கள்..ஒவ்வொரு அறைகளாக உருவாக்கி சுற்றி பாருங்கள்...

நீங்கள் வாழ்க்கை துணை பற்றி உணர்ந்தால் கற்பனையால் வாழ்க்கை துணையின் கைகளை பற்றிகொண்டு நடப்பதாக உணருங்கள்..

நீங்கள் கனவு கார் பற்றி உணர்ந்தால் கற்பனையால் அதில் பயணம் செய்வது போல அல்லது அந்த புது காரின் ஸ்டிரிங்கை கைகளால் பிடித்து கொண்டு ஓட்டுவதாக உணருங்கள்..

கற்பனையில் எது செய்தாலும் அந்த தொடு உணர்வை நீங்கள் இப்போது உணர முடியும்..

இப்போது நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, எங்கே இருந்தாலும் சரி அதை பற்றி துளியும் கவலைபட வேண்டாம்... எப்போது நடக்கும், கேட்டது எப்போது கிடைக்கும் என்பதை பற்றியும் ஆராய வேண்டாம்...அது உங்கள் வேலை அல்ல.

நீங்கள் எவ்வளவு தெளிவாக அக காட்சிகளாக பார்கிறேர்களோ / மனதால் உணர்கிறேர்களோ , அவ்வளவு சீக்கிரம் நீங்கள் நினைத்து நடக்கும்.

நீங்கள் கேட்டது உங்கள் கண்முன் இருப்பதாக, அவற்றுடன் வாழ்வதாக ஆழமாக நம்புங்கள், உணருங்கள்.

நான் கேட்டது எல்லாம் விரைவில் வந்தடையும் . பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் மனதில் சொல்லி கொண்டே இருங்கள். மனதிற்குள் நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [ சக்திவாய்ந்த செயல்முறை ].

உங்கள் தெளிவான அக காட்சிகள், வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் கொண்டு வரும் நீங்கள் கேட்டது எவ்வளவு பெரிதாக இருந்தாலும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.