தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.
தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.
சர்க்கரைக்கு சரியான தீர்வு..
தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.
சிறுநீர் சிக்கல் தீர...
சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.
தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க...
தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.
சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால் தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.