26/10/2020

முதல்வர் வருகைக்காக அவசர கதியில் தரமற்ற சாலை : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்கம் போராட்டம்...

தூத்துக்குடியில் முதல்வர் வருகையை முன்னிட்டு அவசர கதியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. 

தூத்துக்குடி, பாளை ரோட்டில் மேம்பாலம் தேவர் சிலை அருகே முதல்வர் வருகைக்காக கடந்த 22ம் தேதி சாலை அமைக்கப்பட்டது. அவசர கதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள அந்த  சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பாடும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தரமற்ற சாலை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று மலர்வளையம் வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. 

மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளர்  பாலா,  எஸ்எப்ஐ Iமாவட்டசெயலாளர் ஜாய்சன், ஜேம்ஸ், முத்துகிருஷ்ணன், மாவட்டக்குழு ஆவடையப்பன்,  ஜெயமுருகன், அஜெய், கார்த்தி, மகராஜன், வேனு சுயம்பு உட்பட பலர் கலந்து கொண்டு, தரமற்ற சாலையை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே்ணடும். விபத்து ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.