கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் முழுக் கொள்ளளவான 52 அடியில் 51 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 316 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 316 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளில் ஒன்றாம் எண் மதகு உடைந்தது. மதகிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி
பின்னர், அணையின் மற்றொரு மதகிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை: மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தண்ணீர் வெளியேற்றம் குறித்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.