வீட்டுத்தோட்டம் போட ஆசைதான், ஆனால் தண்ணீருக்கு எங்கு செல்வது? என்று மலைத்து நின்றுவிடுவோம். இனி அந்த கவலையை விடுங்கள். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரையே எளிய முறையில் சுத்தப்படுத்தி பயன்படுத்தால்.
இதோ அதற்கான தொழில்நுட்பம்...
வீட்டில் உள்ள குளியல் அறை, கழிவறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்து வெளியே செல்லும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும். அவற்றை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சினால்... அவை பாதிப்படையும்.
அதேசமயம், இந்த நீரை எளிய முறையில் சுத்திகரித்துவிட முடியும். அதைப் பயன்படுத்தினால் செடி, கொடிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.
நீளம், அகலம், ஆழம் அனைத்தும் மூன்று அடி அளவுள்ள ஒரு சிமிட்டி (cement) தொட்டியின் வழியாக கழிவுநீர் செல்வது போல் அமைக்க வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் தண்ணீர் வெளியேற துளை இருக்க வேண்டும்.
தொட்டியில் நீரை விடுவதற்கு முன்பு, மணல், கருங்கல் ச(ஜ)ல்லி போன்றவற்றை பாதி அளவுக்கு நிரப்பி, அதில் கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவும்.
சல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பொருட்களைப்புளிக்க வைக்கும் அல்லது நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , குளியல் அறை நீரில் கலந்துள்ள பொசு(ஸ்)பேட் உப்பு (Phosphate salt), வெடியம் (sodium) என பல உப்புகளையும் தின்றுவிடும்.
கல்வாழை செடிகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டியின் கீழ்ப் பகுதிக்குச் செல்ல உதவும். தொட்டியில் நீரை விட்ட ஒரு மணி நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வரத் தொடங்கும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் செடி, கொடிகள் நன்றாக வளரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.