08/05/2018

சிங்கம்புணரியில் ஏர்விடும் விழா...


சிங்கம்புணரி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பில் பெய்யும் புது மழையை கணக்கிட்டு ஏர்விடும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கு கடந்த புதன்கிழமை நல்ல மழை பெய்தது. இதையடுத்து நேற்று காலை பத்து சிங்கம்புணரி கோவில் காட்டில் பொன் ஏர்விடும் விழா நடைபெற்றது.

இதற்காக கோவில் நிலத்தில் கோவில் நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் சார்பாக  சிறப்பு வழிபாடு செய்து கோவில் மாடுகளை ஏரில் பூட்டி உழுதனர்.

இதை தொடர்ந்து மற்ற பொதுமக்களும் தங்கள் வயல் காடுகளில் ஏர் உழுதனர். இவ்வாறு செய்வதால் இப்பகுதியில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சில கிராமங்களில் சித்திரை முதல் நாளே ஏர்உழும் நிகழ்ச்சி நடைபெறும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.