நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.
மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.
நனைமருவும் சினை பொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
நினகரமண் டலம் வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனம் மருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல் மழையோ மது மழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை.
பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048.
பொருள்: மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.
அறிவியல்: சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள்? எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம். அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நருமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.
ஆதலால் மழை வளத்தை பெறுகும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம். மழை வளத்தை பெறுவோம்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.