அரசியலமைப்புச் சட்டத்தில் 377 பிரிவான தன்பாலின உறவை குற்றம் என்பதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை அதிகாரி தனது ஆண் நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார். ஓடிசா மாநிலத்தில், வணிக வரித்துறையில் பணியாற்றும் துணை ஆணையர் ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான்(வயது34) என்ற திருநங்கைதான் தனது நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
என்னுடைய ஆண் நண்பர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஆனால் என்னைக் காட்டிலும் வயது குறைவாக இருந்ததால், நான் ஏற்கவில்லை. இது உடல்ரீதியான ஈர்ப்பு என்று அவருக்கு அறிவுரை கூறினேன் ஆனால் அவர் ஏற்கவில்லை.
என்னை விரும்புவதாகத் தெரிவித்தார். அவரின் உண்மையான அன்பை புரி்ந்துகொண்டு நானும் விரும்பினேன். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரும், நானும் காதலித்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்ய என்னை அணுகினார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது ஒரேபாலின உறவு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், என் காதலரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்.
எங்கள் திருமணம் முடிந்தபின் நாங்கள் இருவரும், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளோம். என் மகளை வளர்த்து நான் அவளை உலக அழகிப்போட்டியில் பங்கேற்க வைக்க விருப்பம். அவள் தன்னுடைய தாய் ஒரு திருநங்கை என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அந்த தருமணம்தான் எனக்கு மிகுந்த பெருமையான நேரமாகும் என்றார்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.