சின்னகட்சி பெரியகட்சி பாகுபாடு இல்லாமல் சின்ன இயக்கம் பெரிய இயக்கம் வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் துப்பாக்கி சூடுநடைபெறப் போவது முன்கூட்டியே தெரிந்தே நடைபெற்றுள்ளது!
களத்தில் ஒரு பக்கியையும் காணோம்...
பெரிய கட்சிகளுக்கு அரசியல் கட்சிகளை விரட்டியடித்த மக்கள் சாகட்டுமே என்ற குரூரபுத்தி!
புதிய குட்டி கட்சிகளின் நிலைபாடு தான் கேள்விக்குறி!
பணமா? பயமா?
இதில் திமுக ஒருபடி மேலே போய் கீதாஜீவன் (கட்சிவிசுவாசம்+ ஸ்டெர்லைட் விசுவாசம்) மூலம் அதே தினத்தில் திட்டமிட்ட போட்டி ஊர்வலம் ஒன்றை சமூகவிரோதிகள் துணையோடு காவல்துறை தயவோடு நடத்தி காவலர்களை பொதுமக்கள் தாக்குவது போல நாடகம் நடத்தி கைதாகி துப்பாக்கி சூட்டுக்கு காரணத்தை உருவாக்கினார்!
சரியாக கீதாஜீவன் மற்றும் 70 ரவுடிகள் கைது செய்து காவல்துறை பத்திரபடுத்திய பின் துப்பாக்கி சூடு நடந்தது!
வேதாந்தா, பிஜேபி ,அஇஅதிமுக ,திமுக, அமமுக ,காங்கிரஸ், மதிமுக மற்றும் உதிரிபுதிரி அதிரி குதறி கட்சிகள்,
சமுக விரோதிகள் காவல்துறை,மாவட்ட ஆட்சியர் ,மாசுகட்டுபாட்டு வாரியம் , நீதித்துறை மற்றும் ஊடகத்துறை
இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த வரலாறே!
மே-22...
1.பன்னாட்டு முதலாளித்துவ நரி வேதாந்தாவின் அசாத்திய பணம்.
2.மத்திய அரசின் இனவெறி மதவெறி கொள்ளையடிப்பு கொள்கை.
3.ஆளும் அடிமை அஇஅதிமுக.
4.ஆளும் கட்சிக்கு சாதகமாக எதற்கும் உதவாத எதிர்கட்சி.
5.காவல்துறையின் கண்மூடித்தனமான ஏவல் புத்தி.
6.பதவிக்காக படிப்பை அடகுவைத்த அதிகாரிகள் வர்கம்.
7. ஊனமாகிப்போன ஊடகங்கள் செய்த இருட்டடிப்பு.
8. பாம்பு மிஸ்ராவின் குட்டிகள் கையில் சிக்கிய நீதித்துறை கள்ளமௌனம்.
9.உதிரிகட்சிகளின் பெயரளவு எதிர்ப்பு.
இயக்கங்களின் கையாலாகாத ஒப்பாரி.
10.தூத்துகுடி மக்கள் செத்தால் எனக்கென்ன? என்ற பிறப்பகுதி மக்களின் சுயநலம்.
11.போலி போராளிகளாக மக்களோடு ஊடுறுவி போராட்டத்தை திசைதிருப்பிய ஸ்டெர்லைட் கைகூலிகள்.
12. வெற்று விளம்பரத்துக்காக வந்து தன்னை மதிக்கவில்லை என விலகி போராட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த சில துரோகிகள்.
13.வீரத்தை காட்டுகிறேன் என்று சாதாரணமக்களை பற்றி கவலைபடாது வன்முறை செய்த போராளிகள் மற்றும் காவல்துறையினர்.
என 13 துரோகங்கள் 13 தோட்டாக்களாக எம் மக்களின் 13 உயிர்களை பலிகொண்ட மே- 22 ஒரு துரோக வரலாறு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.