கங்கை நதியை சுத்தம் செய்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது என்று தென் இந்தியாவில் சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
5YearChallenge மற்றும் 10YearChallenge என்ற ஹாஷ்டாகுடன் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படமானது பகிரப்பட்டுள்ளது. கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அந்த சமூக ஊடக பகிர்வு கூறுகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனும் அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.
கங்கை நதியின் மாற்றத்தை பாருங்கள். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போதும், 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் போது எப்படி உள்ளது என்று பாருங்கள் என்கிறது ட்வீட்.
ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.
கங்கையின் நிலை என்ன?
கங்கை நதியை சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை என்கிறது பாராளுமன்ற நிலைக் குழுவின் கடந்தாண்டு அறிக்கை.
https://aajtak.intoday.in/story/budget-2019-namami-gange-modi-gov-clean-ganga-narendra-modi-tut-1-1057962.html
கங்கையை சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய பசுமை ஆணையமும் அரசை குற்றஞ்சாட்டி உள்ளது.
கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.