பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து அனுமதி பெறாமல் இந்தியாவில் ஆன்டிபயோடிக் மாத்திரைகள் விற்கப்படுவதாக ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டன் க்யூன்மேரி பல்கலைக்கழகமும், நியூகாஸ்டல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய சந்தையில் விற்கப்படும் லட்சக்கணக்கான ஆன்டிபயோடிக் மாத்திரைகள் முறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு முதல் 2012 வரை இந்தியாவில் விற்கப்பட்ட ஆன்டிபயோடிக்குகளில் 64 சதவீதம், மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் அனுமதியைப் பெறவில்லை. இந்தியாவில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகப் பல புதிய மருந்துகள் விற்பனையும், விநியோகமும் செய்யப்படுகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வெறும் 4 சதவீத மருந்துகள் மட்டுமே இவ்வாறு அனமதியின்றி விற்கப்படுகின்றன.
ஆன்டிபயோடிக்குகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஏற்கனவே இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போது சட்ட விரோதமாக ஆன்டிபயோடிக்குகள் விற்பனையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த அனுமதி பெறாத ஆன்டிபயோடிக்குகள் 500 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 3,300 பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. இவற்றில், 12 பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.