மனிதர்கள் மட்டுமே கேள்வியும் கேட்கிறார்கள்.. பதிலும் தருகிறார்கள்.. கேள்வியும் அர்த்தமற்றது பதிலும் அர்த்தமற்றது...
மனிதனை தவிர எதுவும் கேள்விகள் கேட்பது கிடையாது பதிலும் தருவது கிடையாது.
இப்பிரபஞ்சத்திற்க்கு நோக்கம் எதுவும் இல்லை அதை விளையாட்டு என்கிறோம்.
இப்பிரபஞ்சத்திற்க்கு நிறைவேற்றுவதற்கான எந்த குறிகோளும் இல்லை.
அது எதை நோக்கியும் செல்லவில்லை.
ஆனாலும் அது போய்க் கொண்டிருக்கிறது.
நிறையவே போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் அது விளையாட்டாகத் தான் இருக்க வேண்டும்.
இது கடலின் அலைகள் போல தான் ஆரம்பம் இல்லை முடிவும் இல்லை
எல்லா அலையின் பின்னாலும் அலையிருக்கிறது எல்லா அலைகளின் முன்னாலும் ஏதோ இருக்கிறது.
ஆக கடல் முழுவதும் அலைகளாக இருக்கிறது. அந்த அலைகள் ஆதி அந்தத்திற்க்கு அப்பாற்பட்டது.
மனித மனதின் கேள்விகள் மனித மனதின் பதில்கள் என்று பெரும் குழப்பத்தை நாம் இந்த கேள்வி பதில்களால் உருவாக்கியிருக்கிறோம்.
மரத்தில் இருக்கும் இலைகள் போல, அல்லது வானத்தில் இருக்கும் மேகங்கள் போல, கடலில் இருக்கும் அலைகள் போல, கேள்வியும் பதிலும் இல்லாமல் வாழுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.