27/08/2018

மாத இருப்பை பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள்- எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் அறிவிப்பு...


மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் 3,000 ரூபாய் சராசரி மாத இருப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதன்படி, 50 சதவிகிதத்திற்கு குறைவாக இருப்புத்தொகை இருந்தால் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 10 ரூபாய் அபராதமும், 50 முதல் 75 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி வரியுடன் 12 ரூபாய் அபராதமும், 75 சதவிகிதத்திற்கு குறைந்திருந்தால் ஜிஎஸ்டி வரியுடன் 15 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2,000 ரூபாய் இருப்புத் தொகை கொண்ட புறநகர் பகுதிகளில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ஏழரை ரூபாய், 10 ரூபாய், 12 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 1,000 ரூபாய் இருப்புத்தொகை கொண்ட கிராமப்புறங்களில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 5 ரூபாய், ஏழரை ரூபாய், 10 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.