28/03/2018

ஐம்தாயிரம் வருடமாக தமிழர்கள் வாழ்ந்த மண் இந்த இந்தியா...


நம் தமிழ் மக்கள் சுதந்திரம் பெறுவதற்காக இணைந்து போராடி பின் பிரியாமல், வெறும் 200 ஆண்டுகளாக தான் 'இந்தி' ஆதிக்க இந்திய தேசிய இனத்திற்க்குள் அடைபட்டு கிடக்கிறான் என்பது தான் உண்மை..

'இந்தியன்' என்ற இனம் என்றாவது இருந்தததுண்டா ?

அவருக்கு என்ன மொழி ?
என்ன பண்பாடு ?

தேசிய இனங்களைப் பற்றி படிக்கும் போது எங்காவது இந்தியன் என்று படித்திருக்கீறீரா ?

இந்தியா ஒரு துணைக் கண்டம் அவ்வளவே... அதுவும் தமிழன் போட்ட பிச்சையில் உருவானதே..

இந்தியன் என்று தமிழனையும் மற்ற தேசிய இனத்தவரையும் எப்படி அழைக்க முடியும்..?

மொழி, பண்பாடு போன்ற அனைத்திலும் வேறுபடுகிறார்கள்..

ஆனாலும் அவர்களை சுரண்ட வடநாட்டு இந்தி ஆதிக்க கும்பல் கண்டு பிடித்த ஆயுதம் தான் இந்தியன் என்கிற சொல்லாடல்..

தமிழர்கள் தனித்த தேசிய இனம்..

அவர்களை இல்லாத இந்திய தேசிய இனத்திற்குள் அடைப்பது மிகப்பெரும் தவறு..

தமிழர்கள் பெற்றிருப்பது வெறும் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியுரிமை தான்..

தமிழர்கள் மராட்டியத்தில் கூலி வேலைக்கு சென்ற போது மராட்டியர்கள் அடித்து விரட்டினர்...

அவர்கள் மும்மையில் எந்நிலைமையில் வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்த மும்பை வாசிகளிடம் விசாரிக்கவும்..

அங்கிருந்து இங்கு பிழைக்க வந்த மும்பை மராட்டிய குசராத்தி சேட்டுகள் இங்கு எப்படி வாழ்கிறார்கள் என ஒப்பிட்டு பார்க்கவும்...

இரண்டும் இந்தியா தானே...

அவர்கள் ஏன் தமிழர்களை  விரட்ட வேண்டும்.. அவர்களிடம் இல்லாத தேசிய உணர்வு தமிழர்களிடம் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஏமாற்று வேலை அன்றி வேறில்லை...

கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் இருக்கின்ற உணர்வுகள் சிறிதும் இன்றி..

தமிழன் எல்லோரிடத்தும் அடிபட்டு வாழ்வதை நீங்கள் எந்த கல்நெஞ்சத்தோடு ஏற்கிறீர்கள் ?

ஒருவன் மட்டும் அடிபடுவது தான் இந்திய தேசியமா ?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுதலித்த கேரள கர்நாடக அரசுகளை தண்டிக்க வக்கற்ற மத்திய 'இந்தி'ய அரசு எந்த முகத்தை வைத்துக் கொண்டு நெய்வேலி மின்சாரத்தை சுரண்டி மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது.?

கொடுங்கள் என்று உரிமையைக் கேட்க அச்சப்படும் தமிழர்கள் இருக்கும் வரை உரிமைகளை நாம் இழந்து கொண்டு தான் இருப்போம்..

மத்திய அரசு என்கிற பெயரால் மாநிலங்களை சுரண்டி வாழுவதை முதலில் தடை செய்ய வேண்டும்..

மாநிலங்களுக்கு தம்மைத் தானே ஆளும் தன்னாட்சி அளிக்க வேண்டும்..

தமிழைக் கல்வி மொழியாக்க இந்திக் காரனிடம் தான் கையேந்தவிருக்கிறது.. முதலில் உரிமையை மாநிலங்களுக்கு கொடுக்கட்டும்..

தமிழக மின்சாரம் தன் கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் ஏன் நீருக்கு கையேந்த வேண்டும்....

கர்நாடகத்திற்கு மின்சாரத்தை தடை செய்ய எந்த ஆட்சியாளரும் முன் வரவில்லை.. காரணம் யாரும் தமிழர்கள் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.