ஏன்னா, நாளைக்கு உங்க சாதிக்காரனை நிறுத்தினால் அவரை தாண்டி வேறு யாருக்கும் ஓட்டு போட கைவராது உங்களுக்கு என்ற நம்பிக்கையினால், கை நீட்டி காசு வாங்கிட்டா, சத்தியம் பண்ணிட்டா மாற மாட்டோம் என்ற நம்பிக்கினால், இதயெல்லாம் மறந்துவிடுவோம் தேர்தல் வரும் பொழுது என்ற நம்பிக்கையினால்..
இதுவரை இப்படித்தான் இருந்தோம்.. இனிமேயும் இப்படித்தான் இருக்க போகிறோமா இல்லை ஒவ்வொரு நிகழ்வையும் குறித்து வைத்துக் கொண்டு அடித்து விரட்ட போகிறோமா..?
எப்படிடா இவங்ககிட்ட வாக்கு கேட்டு போறது என்று நினைத்து கூனி குறிகியாவது நிற்க வைக்க வேண்டும். அதை செய்யவில்லை என்றால் இன்னைக்கு வடிக்கும் கண்ணீர் சோகம் எல்லாம் நடிப்பு, நல்லவன் வேஷம்.. மற்றபடி சுட்டவனுக்கும் சுட சொன்னவனுக்கும் இந்த அழுகை சத்தத்தை ரசித்தவனுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.