02/01/2018

​​கந்து வட்டியால் மனமுடைந்து விவசாயி தற்கொலை​...



அரியலூரில் கந்துவட்டி கொடுமையால் நிலத்தை விற்று மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பெரியமறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம். அதே கிராமத்தில் உள்ள அவரது நிலத்தின் பேரில் ஏலாகக்குறிச்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரிடம் 2005ஆம் ஆண்டில் ரூ.1.75 லட்சம் கடன் பெற்றதாகத் தெரிகிறது. 2012ஆம் ஆண்டில் கடனை அடைக்கச் சென்று எவ்வளவு கட்ட வேண்டும் என்று மாணிக்கம் கேட்டபோது, 10 லட்ச ரூபாயை நாச்சிமுத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த மாணிக்கம், ரூ.1.75 லட்சத்திற்கு மாதம் 2 ரூபாய் வட்டி கணக்கிட்டாலும் 4 லட்ச ரூபாய் வரைதானே செலுத்த நேரிடும் என்று கேட்டுள்ளார்.

பின்னர் தன்னிடம் இருந்த ரூ.1.75 லட்சத்தை நாச்சிமுத்துவிடம் அளித்ததாகவும் தெரிகிறது. ஆனால், கடனுக்கு ஈடாக மாணிக்கத்தின் நிலத்தை வேறு ஒருவருக்கு 10 லட்ச ரூபாய்க்கு நாச்சிமுத்து விற்றதாகத் தெரிந்ததும், மாணிக்கம் மற்றும் அவரது மகன் ஜெகந்நாதன் இருவரும் கந்து வட்டி கொடுமை குறித்து திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனமுடைந்த மாணிக்கம், தனது வயலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் துயர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.