திருவள்ளுவர் ஐயராகவோ பறையாராகவோ கோனாராகவோ தேவராகவோ பள்ளராகவோ ஐயங்காராகவோ அதுவாகவோ இதுவாகவோ எதுவாகவோ இருந்தால் என்ன...
அவர் சமஸ்கிருதம் மட்டுமல்ல இந்தி துளு மராட்டி கன்னடம் பிரஞ்சு மேண்டரின் மலாய் போன்ற ஆயிரம் மொழிகளை கற்றறிந்தவராக கூட இருக்கட்டும்...
எந்த மொழியில் அவர் திருக்குறளை எழுதினார்?
நீங்கள் சொல்வது போல் ஒரு ஐயராக சமஸ்கிருத புலியாக இருந்த போதும் அவர் தமிழை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால்... சமஸ்கிருதத்தில் இல்லாத சிறப்பு தமிழுக்கு இருப்பதானால் தானே...
திருவள்ளுவரோடு நீங்கள் நிறுத்தியிருக்கலாம்.. இளங்கோவடிகள் ஐயர், மணிமேகலை ஐயர், ஆண்டாள் ஐயர், கம்பர் ஐயர் என்று வரிசையாக நிறைய ஐயர்களை இழுத்து விட்டிருக்கிறீர்கள்...
இத்தனை ஐயர்கள் இருந்தும் அனைவரும் சம்ஸ் மொழியில் இலக்கியம் இயற்றாமல் தமிழை ஏன் தேர்ந்தெடுத்தார்கள். ஒருவேளை சம்ஸ் குறைபாடுள்ள மொழியோ? இலக்கியங்கள் இயற்ற வளமற்ற மொழியோ?
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் "
இப்படி பல மொழிகள் கற்றறிந்த பாரதி ஐயர் பாடிச்சென்றிருக்கிறாரே.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நல்லவேளை அவர் இப்போது உயிரோட இல்லை இருந்திருந்தால் உங்களைத் தேடி வந்து கவிதையாலேயே அடித்துக் கொன்றிருப்பார்.
இப்படி பல பிராமின்கள் புறக்கணித்த சம்ஸ் மொழியை விட்டுவிட்டு பல பிராமின்கள் கூடி வளர்த்த தமிழைக் கற்று நீங்களும் உங்கள் சந்ததியினரும் பலன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களை நாங்கள் "Abuse" பண்ணி விடுவோம் என்று கூறியிருக்கிறீர்கள்.
உண்மையில் பிராமின் தவிர வேறு யாராலும் இலக்கியங்கள் எழுத முடியாது என்பதுபோல் உங்கள் சாதி வெறியை வெளிப்படுத்தியதோடு சில தமிழ் சொற்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவற்றை சம்ஸ் என்று கூறி நீங்கள் தான் எங்களை "Abuse" பண்ணியிருக்கிறீர்கள்.
இருந்தாலும் உங்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம்...
பிராமின்கள் தேர்ந்தெடுத்து இலக்கியங்கள் எழுதிய தமிழைப் படித்து வாழ்வில் வளம் பெற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.